5000 mAh பேட்டரி.. 100 வாட்ஸ் சார்ஜிங்.! வெளியானது ரியல்மீ 12 ப்ரோ+ அம்சங்கள்.!

Realme 12 Pro+

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ரியல்மீ (Realme), கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து நார்சோ மாடல்களில் கவனம் செலுத்தி வந்த ரியல்மீ,  ஜிடி சீரிஸில் ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்கு மத்தியில் ரியல்மீ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் தயாரித்து அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ரியல்மீ 12, ரியல்மீ 12 ப்ரோ மற்றும் ரியல்மீ 12 ப்ரோ+ ஆகிய மூன்று மாடல்கள் அறிமுகமாகலாம். இதில் ரியல்மீ 12 ப்ரோ+ போனின் ஒரு சில அம்சங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் களமிறங்கும் இன்ஃபினிக்ஸ்-ன் பட்ஜெட் போன்.! என்ன மாடல்..எப்போ அறிமுகம் தெரியுமா..?

அதன்படி, ரியல்மீ 12 ப்ரோ+ ஸ்மார்ட்போனில் 1.5K ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் அளவில் எல்டிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய ஓஎல்இடி டிஸ்பிளே பொருத்தப்படலாம். இந்த டிஸ்பிளே 90 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டிருக்கலாம்.

வெளியான தகவலின் படி, இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ கிராஃபிக்ஸ் கார்டுடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் பொருத்தப்படலாம். இதற்கு முந்தைய ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ் மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

50 எம்பி டெலிஃபோட்டோ கேமராவுடன் அறிமுகமாகிறது ரியல்மீ ஜிடி 5 ப்ரோ.! எப்போ தெரியுமா.?

இதன் கேமராவைப் பொறுத்தவகையில், டிரிப்பில் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷனுடன் (OIS) கூடிய 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். செல்ஃபிக்காக 32 எம்பி கேமரா வரலாம் என்று கூறப்படுகிறது.

ரியல்மீ 12 ப்ரோ+ போனில் 5000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கலாம். இதை சார்ஜ் செய்ய 100 வாட்ஸுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான 11 ப்ரோ சீரிஸ் ரூ.23,999 என்ற விலைக்கு அறிமுகமானது. அதே போல ரியல்மீ 12 ப்ரோ+ போனும் ரூ.25,999 என்ற விலைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்