தொழில்நுட்பம்

Google Pixel 8 Series: 50 எம்பி கேமரா..5,050 mAh பேட்டரி.! அதிரடியாக களமிறங்கிய கூகுள் பிக்சல் 8 சீரிஸ்.!

Published by
செந்தில்குமார்

டெக் உலகில் வெற்றி நடைபோடும் கூகுள் தனது தயாரிப்பான கூகுள் பிக்சல் 8 சீரிஸை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, மேட் பை கூகுள் ஹார்டுவேர் (Made by Google Hardware) வெளியீட்டு நிகழ்வில் கூகுள் பிக்சல் 8 மற்றும் கூகுள் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பல சிறப்பான அம்சங்களுடன் வருகின்றன. ஆனால் இதன் வடிவமைப்பு முந்தைய பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோவை போலவே உள்ளது. இருப்பினும் பிக்சல் 8 சீரிஸ் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் ஆனது.

கூகுள் பிக்சல் 8 விவரக்குறிப்புகள்

டிஸ்பிளே:

கூகுள் பிக்சல் 8 ஆனது 60 ஹெர்ட்ஸ் முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடைய 6.2 இன்ச் அளவுள்ள எப்எச்டி+ ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது பிக்சல் 7-ஐ விட .1 இன்ச் குறைவாகும். இது 2,000 நிட்ஸ் வரையிலான உச்சகட்ட பிரைட்னெஸ்ஸை வழங்குகிறது.

இதில் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் ஐபி68 ரேட்டிங் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் ஆல்வேஸ் ஆன் அம்சம் உள்ளது. இதனால் உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை மொபைல் ஸ்க்ரீன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் கூட பார்த்துக் கொள்ள முடியும்.

பிராசஸர்:

பிக்சல் 8 ஸ்மார்ட்போன் கூகுள் டென்சர் ஜி3 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது டைட்டன் எம்2 என்கிற பாதுகாப்பு சிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 14 மூலம் ஓஎஸ் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் தரப்படும் என்று நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோமீட்டர், அம்பியின் லைட் சென்சார், மேக்னெட்டோமீட்டர் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா: 

இதன் கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் பின்புறம் OIS மற்றும் EIS போன்ற அம்சங்கள் கொண்ட 8x வரையிலான சூப்பர் ரெஸ் ஜூம் திறன் கொண்ட 50 எம்பி ஆக்டா பிடி வைட் அங்கிள் மெயின் கேமரா மற்றும் 12 எம்பி அல்ட்ராவைடு கேமரா என டபுள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறம் தெளிவான செல்ஃபிக்காக 10.5 எம்பி கேமரா உள்ளது. அல்ட்ரா எச்டிஆர், மேஜிக் எடிட்டர், போட்டோ அன்ப்ளர், ஃபேஸ் அன்ப்ளர், நைட் சைட், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி போன்றவை கேமரா அம்சங்களில் அடங்கும்

பேட்டரி:

கூகுள் பிக்சல் 8 மாடலில் 4,575 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 27 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் க்யூஐ-சான்றளிக்கப்பட்ட 18 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இதில் பேட்டரி ஷேர் அம்சமும் இருப்பதால், மற்ற மொபைல் போனைக் கூட சார்ஜ் செய்யலாம்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

பிக்சல் 8 ஆனது அப்சிடியன், ஹேசல் மற்றும் ரோஸ் என மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. அதோடு, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதில் 128 ஜிபி வேரியண்ட்டு ரூ.75,999 என்ற விலையிலும், 256 ஜிபி வேரியண்ட்டு ரூ.82,999 என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது.

 

கூகுள் பிக்சல் 8 ப்ரோ விவரக்குறிப்புகள்

டிஸ்பிளே:

கூகுள் பிக்சல் 8 ப்ரோ ஆனது 1344 x 2992 ரெசல்யூஷன் கொண்ட 6.7 இன்ச் அளவுள்ள எல்டிபிஓ ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அதேபோல, 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,400 நிட்ஸ் வரை உச்சகட்ட பிரைட்னெஸ்ஸை வழங்குகிறது.

இதில் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மற்றும் ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இதிலும் ஸ்க்ரீன் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் போது நோட்டிபிகேஷன்களை பார்க்க ஆல்வேஸ் ஆன் அம்சம் உள்ளது.

பிராசஸர்:

பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கூகுள் டென்சர் ஜி3 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது டைட்டன் எம்2 என்கிற பாதுகாப்பு சிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு 14 மூலம் ஓஎஸ் மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனிற்கு 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் தரப்படும் என்று நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோமீட்டர், அம்பியின் லைட் சென்சார், மேக்னெட்டோமீட்டர் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா:

பிக்சல் 8 ப்ரோ மாடலில் பின்புறம் 50எம்பி ஆக்டா பிடி வைட் ஆங்கிள் கேமரா, 48எம்பி குவாட் பிடி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 30x வரையிலான சூப்பர் ரெஸ் ஜூம் திறன் கொண்ட 48எம்பி குவாட் பிடி டெலிஃபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. அதோடு, முன்புறம் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 10.5 எம்பி கேமரா உள்ளது. இந்த கேமராவி அல்ட்ரா எச்டிஆர், மேஜிக் எடிட்டர், போட்டோ அன்ப்ளர், ஃபேஸ் அன்ப்ளர், நைட் சைட், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி போன்ற பல கேமரா அம்சங்களுடன் வருகிறது.

பேட்டரி:

பிக்சல் 8 ப்ரோமாடலில் நீண்ட நேர பயன்பாட்டிற்காக 5,050 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை சீக்கிரமாக சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் க்யூஐ-சான்றளிக்கப்பட்ட 23 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனை 30 நிமிடங்களில் 50 வரை சார்ஜ் செய்யலாம். இதிலும் பேட்டரி ஷேர் அம்சம் உள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை:

அப்சிடியன் மற்றும் பே என இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் பிக்சல் 8 ப்ரோ ஆனது 12 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 1 டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

இதில் 128 ஜிபி வேரியண்ட்டு $999 (ரூ.83,161) என்ற விலையிலும், 256 ஜிபி வேரியண்ட்டு $1,059 (ரூ.88,156) என்ற விலையிலும், 512 ஜிபி வேரியண்ட்டு $1,179 (ரூ.98,139) என்ற விலையிலும், 1 டிபி வேரியண்ட்டு $1,399 (ரூ.1,16,452) என்ற விலையிலும் விற்பனைக்கு உள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன்களை அக்டோபர் 12 முதல் ஃபிளிப்கார்ட், கூகுள் ஸ்டோர் மற்றும் ரீடெய்ல் ஸ்டோர்களில் வாஙகிக்கொள்ளலாம்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

8 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

8 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

8 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

8 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

9 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

9 hours ago