தனி நபரின் தகவல்களை வெளியிட்ட பேஸ்பூக்குக்கு $5,00,00,00,000 அபராதம்!!
விதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக அமெரிக்க வர்த்தக ஆணையம், பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.
சுமார் 9 கோடி நபர்களின் தகவல்களை திருடியதால் பேஸ்புக் மூலம் கேம்பிரிட்ஜ் அநால்டிக்கா என்ற நிறுவனம் புகார் கூறியது. மேலும் இது குறித்து பேஸ்புக் நிறுவனர் கூறுகையில், இந்த குற்றச்சாட்டில் பேஸ்புக்கின் தவறும் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அமெரிக்கா வர்த்தக ஆணையத்திற்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டதாக தெரிய வந்தது. அதனால் அந்நிறுவனத்திற்கு ஐந்து பில்லியன் யூஸ் டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது.