5ஜி சேவையை முதலில் அறிமுகபடுத்தும் முனைப்பில் ஏர்டெல்
இந்தியாவில் இன்டர்நெட் கட்டணங்களை ஜியோவிற்கு முன் ஜியோவிற்கு பின் என இரண்டாக பிரித்து பார்தால் அவ்வளவு விலை மாற்றங்கள். இதற்க்கு முழுமுதல் காரணம் ஜியோ வருகைமட்டும் தான்.
ஜியோ வந்த பின் இன்டர்நெட் விலையை மற்ற நெட்வொர்க் படிப்படியாக குறைத்து இப்போது ஜியோவிர்க்கு போட்டியாக விலைக்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏர்டெல் நிறுவனம் ஜியோவை முந்தி செல்ல பல சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் ஸ்வீடன் நாட்டில் உள்ள எரிக்ஸனுடன் இணைந்து 5ஜி சேவையை ஜியோவிற்கு முன்னதாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்த எரிக்ஸன் நிர்வனம் டெலிகாம் உபகரங்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.