தொழில்நுட்பம்

இனிமேல் செல்ஃபியிலும் 4K வீடியோ ரெக்கார்டிங்.! Xiaomi-யின் புதிய அவதாரம்…

Published by
கெளதம்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomi நிறுவனம், சீனா மற்றும் உலகளாவிய சந்தைகளில் Xiaomi 14 சீரிஸை வெளியிட தயாராகி வருகிறது. Xiaomi 13 மற்றும் Xiaomi 13 Pro ஆகியவற்றிக்கு பின் Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். அதற்கு முன்னதாக, Xiaomi 14 சீரிஸின் அம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்தது.

Xiaomi 14 [Image Source : Gadgets 360]

குறிப்பாக, இந்த சீரிஸ் அசத்தலான செல்ஃபி மற்றும் USB செயல்திறனை கொண்டுள்ளது. Xiaomi இறுதியாக தனது ஃபிளாக்ஷிப் போன்களை செல்ஃபி அம்சத்தில் வியக்க வைக்க முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது. அதாவது, இந்த 14 சீரிஸின் செல்ஃபி கேமராவில் 4K வரை வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியுமாம். இது ஒரு அசத்தலான அப்டேட் என்று தான் சொல்ல வேண்டும். இதன் விலை ரூ.54,999 இருந்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi 14 and 14 Pro [Image Source : Gadgets 360]

Xiaomi 14 சீரிஸின் முக்கிய அம்சங்கள்:

  • வரவிருக்கும் Xiaomi 14 சீரிஸ் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 8 Gen 3 செயலியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
  • இந்த அதிநவீன சிப்செட் மிகவும் திறமையான 2+5+1 CPU-வைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Xiaomi 14 மற்றும் Xiaomi 14 Pro ஆகியவை முன்பு அறிவிக்கப்பட்ட Xiaomi 14 Ultra உடன் பெரிஸ்கோப் ஜூம் கேமராக்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொலைவில் உள்ள பொருட்களை துல்லியமாக க்ளிக் செய்ய உதவுகிறது.
  • அதன்படி, Xiaomi 14 Pro இன் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா, 115mm குவிய நீளத்துடன் 5x ஆப்டிகல் ஜூம் வழங்கும். மேலும், Xiaomi 14, 3.9x ஆப்டிகல் ஜூம் மற்றும் குறுகிய 90 மிமீ குவிய நீளம் கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டிருக்கும்.
  • இது செல்ஃபி கேமராவில் 4K வீடியோ பதிவு போன்ற கூடுதல் புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும்.
  • Xiaomi 14  90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும், அதே நேரத்தில் Xiaomi 14 Pro 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும். மேலும், இரண்டு மாடல்களும் 5,000mAh திறன் கொண்ட பேட்டரி உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Xiaomi 14 and 14 Pro [Image Source : Gadgets 360]

Xiaomi 14 மாடல் எண்கள்:

IMEI எண்கள் வெளியாகியுள்ளது. IMEI என்பது GSMA ஆல் பராமரிக்கப்படும் உலகளாவிய மைய தரவுத்தளமாகும்.  Xiaomi 14 மாடல் எண்கள் 23127PN0CG மற்றும் 23127PN0CC. Xiaomi 14 Pro மாடல் எண்கள் 23116PN5BG மற்றும் 23116PN5BC உடன் வருகிறது. Xiaomi 14 ஆனது 23127PN0CC (சீனா) மற்றும் 23127PN0CG (உலகளவில்) ஆகிய பெயர்களைக் கொண்ட இந்த இரண்டு சாதனங்களுக்கான மாடல் எண்கள் இணையத்தில் கசிந்துள்ளது. Xiaomi 14 Ultra அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். இறுதி ஃபிளாக்ஷிப் சீனாவில் Q1 2024 இல் அறிமுகமாகலாம்.

Xiaomi 14 and 14 Pro [Image Source : Gadgets 360]

இந்த ஸ்மார்ட்போன்களின் மாதிரி எண்களை வைத்து ஆராயும்போது, 2312-2311 என்ற எண்கள் இந்த போன்கள் டிசம்பர் 2023 அல்லது நவம்பர் 2023 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், Xiaomi 14 சீரிஸ் இந்த ஆண்டு டிசம்பர் அல்லது ஆட்டுத்த ஜனவரிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த 14-ன் சீரிஸ் முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், வரும் காலங்களில் உலகளாவிய சந்தைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Published by
கெளதம்

Recent Posts

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

7 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

8 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

10 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

10 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

10 hours ago

கரடு முரடான ரோட்டிற்கு குட்’பை’… விரைவில் வருகிறது பறக்கும் கார்? வைரல் வீடியோ உள்ளே…

சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில்,  சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…

11 hours ago