சாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி இந்த ஆண்டு முதல் விற்பனைக்கு வருகிறது..!
கேலக்ஸி எஸ்9 மினி என்கிற பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் கேலக்ஸி மினி தொடர் இந்த ஆண்டு நிச்சயமாக வெளியாகி விடும் என்பது போல் தெரிகிறது. கீக்பென்ச் தளத்தில் வரவிருக்கும் இந்த மினி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் சில பட்டியலிடப்பட்டுள்ளது.
4ஜிபி அளவிலான ரேம், சிங்கிள் கோர் டெஸ்டில் 1619 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 5955 புள்ளிகளையும் பெற்றுள்ள கேலக்ஸி S9 மினி ஆனது, வெளியான பட்டியலின்படி 4ஜிபி அளவிலான ரேம் மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடனான 1.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி கொண்டு இயங்கும்.
ஆண்ட்ராய்டு 8.0.0 ஓரியோ ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட இந்த எஸ்9 மினி பற்றிய விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையில், சாம்சங் நேற்று இந்தியாவில் அதன் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8 ப்ளஸ் மீதான விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஆனது ரூ.57,900/-க்கு பதிலாக ரூ.49,990/-க்கு வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்8+ ஆனது ரூ.10,910/- குறைக்கப்பட்டு, ரூ.53,990/-க்கு வாங்க கிடைக்கிறது. அதன் அசல் விலை ரூ.64,900/- ஆகும். கேலக்ஸி எஸ்8 பிளஸ்-ன் 128ஜிபி மாடல் தற்போது ரூ.70,900/-க்கு பதிலாக ரூ.64,900/-க்கு வாங்க கிடைக்கிறது.