சமீபகாலமாக, தனது சாதனங்களுக்கான மேம்படுத்துதல்களை அதிகளவில் கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்றாலும் அவை எல்லாமே சிறப்பாக செயல்படுகின்றன என்று கூற முடியாது.
ஒரு எடுத்துக்காட்டாக, கூகுள் டியோ வி30-க்கான மேம்பாடாக வெளியிடப்பட்ட வி30 மேம்பாட்டை அந்நிறுவனம் தற்போது நிறுத்தி வைத்துள்ளது. வெர்ஷன் 30-ன் மேம்பாட்டில் அப்ளிகேஷனின் செயல்பாட்டை பாதிக்கும் வகையில், அழைப்புகளின் ஒலி அளவு குறையும் பிரச்சனை ஏற்படுவதை தொடர்ந்து, அதன் வெளியீட்டை கூகுள் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது என்று இணையதளத்தில் வெளியான சில தகவல்களின் அடிப்படையில் தெரிய வருகிறது.
இது குறித்து பீபாம் வெளியிட்டுள்ள சில தகவல்களின் அடிப்படையில், அப்ளிகேஷனின் செயல்பாட்டை பாதிக்கும் வகையிலான ஒரு பிழை மூலம் அழைப்புகளில் ஒலி அளவு குறையும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த முக்கிய காரணத்தால், மேம்பாட்டை மொத்தமாக வெளியிடுவதை அந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது என்று கூகுள் டியோ-வின் முன்னணி என்ஜினியரான ஜெஸ்டின் உமர்டி, டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார் என்று தெரிகிறது.
இந்த பிரச்சனையைக் குறித்து ஜெஸ்டின் உமர்டி கூறியதாக அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, “கூகுள் டியோ வி30 மூலம் செய்யப்படும் அழைப்புகளில் ஒலி அளவுகள் குறைந்து காணப்படுவதாக, சில ஆன்ட்ராய்டு பயனர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.
எனவே இப்போதைக்கு வி30 வெளியீட்டை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட ஆன்ட்ராய்டு பயனர்களை மீண்டும் வி29.2-க்கு திருப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சனையை நீங்கள் சந்தித்திருந்தால், நவீன வி29.2 பதிப்பு மூலம் மேம்படுத்தி, இதற்கு தீர்வு காணலாம்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கூகுள் டியோ அப்ளிகேஷனை பயன்படுத்துவது தொடர்பாக, நம் வாசகர்களில் யாருக்காவது பிரச்சனை இருந்தால், உங்கள் அப்ளிகேஷனின் பதிப்பை உடனே சோதித்து பார்க்கவும். ஏற்கனவே உங்கள் பதிப்பு வி30-க்கு மேம்படுத்தப்பட்டிருந்தால், மீண்டும் பழைய பதிப்பிற்கு திரும்ப சென்று, இப்போதைக்கு இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம். கூகுள் நிறுவனத்திடம் இருந்து இது குறித்த மேம்பாடுகள் வரும் போது, உங்களுக்கு அறிவிக்கிறோம். எனவே கூகுள் தயாரிப்புகள் தொடர்புடைய எல்லா மேம்பாடுகளையும் குறித்த செய்திகளைப் பெற, தொடர்ந்து எங்களோடு இணைந்திருக்கவும்.
மேலும், கூகுள் தொடர்பான சமீபகால செய்திகள் ஒன்றில், கூகுள் அசிஸ்டெண்ட்டிற்கான முதல் கூகுள் பே ஒருங்கிணைப்பு மூலம் பணப் பரிமாற்றங்களைக் குறித்த கூகுள் நிறுவனத்தின் ஒரு அறிவிப்பை நாங்கள் வெளியிட்டு இருந்தோம். இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள கூகுள் பயனர்களுக்கு, கூகுள் அசிஸ்டெண்ட்டை பயன்படுத்தி இப்போது பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும்.