பிஎஸ்என்எல் கொண்டு வந்த 3 அதிரடி பிளான் ..! வரவேற்கும் வாடிக்கையாளர்கள் ..!
பிஎஸ்என்எல் : பிற சிம்கார்டுகளின் விலை அதிகரித்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் தற்போது அதிரடியாக விலையை குறைத்து 3 ப்ரீபெய்ட் பிளான்களை களமிறங்கியுள்ளது.
நாம் பயன்படுத்தி கொண்டு வரும் சிம்கார்டுகளுக்கு மாதம் மாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை என ரீசார்ஜ் செய்வது வழக்கமாக கொண்டிருப்போம். அதில் ஒரு சிலர் மட்டும் ஒரு வருட பிளானை வருடந்தோறும் ரீசார்ஜ் செய்து கொள்வார்கள். பிஎஸ்என்எல் அல்லாது வேறு சிம்கார்டுகளை பயன்படுத்துவோர் ரீசார்ஜ் விலை ஏற்றத்தால் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதனால் மற்ற சிம்கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் ஒரு சிலர் தற்போது பிஎஸ்என்எல் சிம்கார்டுக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், பிஎஸ்என்எல் தற்போது அந்த ஒரு வருடம் எல்லாம் இலவசம் எனும் பிளானை கொண்டு வந்துள்ளது. அந்த பிளான் வருடந்தோறும் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மிகவும் உபயோகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது பிஎஸ்என்எல் கொண்டு வந்த அந்த 3 ப்ரீபெய்ட் பிளானை பற்றி பார்க்கலாம்.
336 நாள் திட்டம் :
- பிஎஸ்என்எல்லின் ஒரு திட்டம் 336 நாட்களுக்கு/1 வருடம் செல்லுபடியாகும் ரூ.1499 திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் பயனர்கள் எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் வருடம் முழுவதும் பேசி கொள்ளலாம். இது தவிர, 336 நாட்களுக்கு செல்லுபடியாகும் 24 ஜிபி டேட்டாவும் இதில் கிடைக்கும். தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் இதில் செய்யலாம்.
- ஃபோனை மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஓராண்டுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம் கட்டினால் போதும். இதை பிற சிம்கார்டு நிறுவனங்களின் பிளான்களோடு ஒப்பிடுகையில் நாம் வருடம் ரூ.3000/- வரையில் சேமிக்கலாம்.
365 நாள் திட்டம் :
- இந்த திட்டத்தை ‘முழு ஆண்டு ரீசார்ஜ் திட்டம்’ என்றும் அழைக்கலாம், அதற்கு காரணம் இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும் மற்றும் இதன் விலை ரூ.1999/- மட்டுமே ஆகும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்தாலே போதும். இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு / 1 வருடம் 600ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது ஆண்டு முழுவதும் இணையத்தை பயன்படுத்தலாம். இது தவிர, 30 நாட்களுக்கு இலவச பிஎஸ்என் எல் காலர் ட்யூன்களையும் செட் செய்து கொள்ளலாம். மேலும், தினமும் 100 SMSகளையும் பெறுவீர்கள்.
ஒரு நாளுக்கு 2 ஜிபி டேட்டா திட்டம் :
- இந்த திட்டம் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் திட்டம் ஆகும், அதாவது இதன் வேலிடிட்டி 395 நாட்கள் வரை இருக்கும், 1 வருடம் கடந்தும் அதிகமாக 1 மாதம் கூடுதலாகவும் வேலிடிட்டி உள்ளது. இதன் கட்டணம் ரூ.2399/- மட்டுமே. இந்த திட்டத்தில், ஒரு எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். அனைத்து ரீசார்ஜ் பிளான்களிலும் இந்த திட்டம் மிகவும் சிக்கனமானக பார்க்கப்படுகிறது. இது தவிர, தினமும் 2ஜிபி டேட்டாவும் இதில் கிடைக்கும் இது சுமார் 13 மாதங்களுக்கும் டேட்டா இருக்கும்.
சமீபத்திய ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரிப்பினால் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில், பிஎஸ்என்எல்லின் இந்த திட்டங்கள் பயனர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.