2D போட்டோ(2D Photo) வை 3D போட்டோ(3D Photo)வாக மாற்றலாம்.!அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் அசத்தல்.!

Default Image

அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், 2D போட்டோவை(2D Photo) 3D போட்டோவாக மாற்றும் நவீன செயற்கை நுண்ணறிவு இணையதளம் மற்றும் அதன் பயன்பாடு ஒன்றை  உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆர் ஃப்லெய்ஷெர் மற்றும் ஷிரின் அன்லென் ஆகிய இரு தொழில்நுட்ப வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்மதிப்பை அதிகரிக்கும் முயற்சியில் பல ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையில் 2D போட்டோவை 3D போட்டோவாக மாற்றும் Volume.gl என்ற இணையதளத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த இணையதளத்தில் நாம் மொபைல், கேமரா போன்றவற்றில் எடுக்கும் 2D போட்டோக்களை மிக எளிதாக 3D போட்டோவாக மாற்றிவிடலாம்.

சுவாரஸ்யமான இந்த இணையதளத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சியையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, இந்த இருவரும் சேர்ந்து ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented Reality) தொழில்நுட்பத்தின் மூலம் வீடியோ காட்சியில் உள்ள அசையும் மனித உருவங்களை நிஜ உலகில் தோன்றச் செய்ய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினர்.

அதாவது, ஒரு வீடியோவில் நாம் பார்க்கும் மனிதர்களை நிஜ உலகில் அப்படியே பார்க்கலாம்.

மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.

2D photo (2D Photo) can be converted into 3D Photo (3D Photo Technicians!

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்