25MB செல்ஃபி கேமாராவுடன் 11,999 ரூபாய்க்கு அறிமுகமாகிவிட்டது ரியல்மீ யு1! அதன் சிறப்பம்சங்கள்!!!
25mb செல்ஃபி கேமிராவுடன், 16எம்பி & 2எம்பி என இரட்டை கேமிராவுடன் ரியல்மீ தனது புதிய மாடலான ரியல்மீ யு1 மாடலை இன்று வெளியிட்டுள்ளது. இதனை அதிக விலைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த மாடலை 11,999 ரூபாய்க்கு விற்பனைக்கு அறிமுகம் செய்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.
அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்த மாடலை வாங்குபவர்களுக்கு கேஷ்பேக் போன்று பல ஆஃபர்களை வழங்குகிறது.
ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080×2340 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 3ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி யூ1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது.
DINASUVADU