சாட்GPT-க்கு மாதம் 20 டாலர் சந்தா திட்டம்- OpenAI அறிமுகம்.!
சாட்GPT (ChatGPT) க்கு, மாதத்திற்கு 20 டாலர் செலுத்தும் சந்தா திட்டத்தை, OpenAI அறிமுகப்படுத்துகிறது.
உலகம் முழுவதும் தற்போது பரவலாக பேசுபொருளாகிவரும் சாட்GPT எனும் செயற்கை நுண்ணறிவு AI, ஒரு வைரல் நிகழ்வாக மாறியதை அடுத்து, அதைப் பணமாக்குவதை நோக்கமாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவுக்கான சோதனை நிறுவனமான OpenAI இன்று ChatGPT-க்கான புதிய சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த செயற்கை நுண்ணறிவு AI ஆனது, மனிதனைப்போலவே, கட்டுரைகள், கவிதைகள், மின்னஞ்சல்கள், பாடல் வரிகள் மற்றும் பலவற்றை எழுத முடியும்.
மாதத்திற்கு 20 டாலரில் தொடங்கும் இந்த ChatGPT Plus என அழைக்கப்படும், சேவையானது, அடிப்படை-நிலை ChatGPT ஐ விட பல நன்மைகளை வழங்குகிறது, மேலும் நெருக்கடியான நேரங்களிலும், ChatGPTக்கான சேவைகள் விரைவாகவும் மற்றும் புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுடனும் கிடைக்கிறது என்று OpenAI தெரிவித்துள்ளது.
இலவச ChatGPT சேவையும் கிடைக்கும் அது நீக்கப்படுவதில்லை, ChatGPT Plus தற்போது அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் வரும் மாதங்களில் கூடுதல் நாடுகளில் இந்த ChatGPT Plus-ஐ விரிவுபடுத்தப் போவதாகவும் OpenAI கூறியுள்ளது. சர்ச்சைகள் மற்றும் பல தடைகள் இருந்தபோதிலும், ChatGPT ஆனது OpenAI-க்கான வெற்றியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இது பலரின் கவனத்தையும் வெகுவிரைவில் ஈர்த்தது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பல பில்லியன் டாலர்கள், ChatGPTயில் முதலீடு செய்யப்பட்டுள்ளதால், லாபம் ஈட்டுவதற்கான அழுத்தத்தில் OpenAI உள்ளது. OpenAI ஆனது 2023 ஆம் ஆண்டில் 200 மில்லியன் டாலர் சம்பாதிப்பதை எதிர்நோக்கியுள்ளதால் சந்தா முறை கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் OpenAI எதிர்காலத்தில் மொபைல் ChatGPT செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.