இந்தியாவில் OTT பயனர்கள் 20% அதிகரிப்பு! வெளியான தகவல்.!
இந்தியாவில் ஒடிடி(OTT) பார்வையாளர்கள் இந்த ஆண்டு 20% அதிகரித்து 420 மில்லியனைக் கடந்தது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சமீப காலங்களில் ஒடிடி(OTT) பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு 20% சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்மக்ஸ் ஒடிடி(OTT) ஆடியன்ஸ் சைசிங் அறிக்கை 2022ன் படி 2021 ஆம் ஆண்டில் 353.2 மில்லியனாக இருந்த இந்தியாவின் ஒடிடி பார்வையாளர்கள் 2022 இல் 20% உயர்ந்து 423.8 மில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 30% சதவீதம் இது மேலும் பரவியுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ஏற்கனவே இது குறிப்பிட்ட (79%) பயனர்களை பெற்று, பரவி வரும் நிலையில், கிராமம் மற்றும் சிறிய நகரங்களில் 20% மேலும் வளர்ச்சியடைந்துள்ளது.
தற்போது செயலில் உள்ள பயனர்களின் 119 மில்லியன் மக்கள் ஒடிடி சந்தாதாரர்களாகவும், 49 மில்லியன் மக்கள் பணம் எழுதி வீடியோ பார்க்கும் பார்வையாளர்களாகவும் இருக்கின்றனர் என்று அந்த அறிக்கையில் வெளியானது.