18 ஓடிடி, 150 டிவி சேனல்! ஜியோவை காலி செய்யப் போகும் எக்ஸைடெல் நிறுவனம்?
ஜியோவைப் பிராட்பேண்ட் போலவே, அதிவேகமாக இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடரானா எக்ஸைடெல் நிறுவனமும் பிராட்பாண்டில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
சென்னை : கடந்த 2016-ம் ஆண்டில் ஜியோ நிறுவனம் உருவெடுத்த போது இலவச இன்டர்நெட்டில் தொடங்கி அதன் பிறகு குறைந்த விலையில் அதிவேக இன்டர்நெட் மற்றும் குறைந்த விலையில் அளவில்லாத இன்டர்நெட் என அறிமுகப்படுத்தி நம்மை அதற்கு பழக்கப்படுத்தியது.
ஆனால், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் ஜியோ தனது பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி கொண்டே போனது. தற்போது, சமீபத்தில் கூட ஜியோ தனது சிம்கார்ட்டுக்கான கட்டணத்தை உயர்த்தியது. இதில், பல ஜியோ வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் போன்ற சிம்களுக்கு மாறிவிட்டனர்.
ஆனாலும், அதிவேக இன்டர்நெட் சேவைக்கு பழக்கமாகிய ஒரு சிலர் வேறு வழியின்றி ஜியோவை அணுகி வருகின்றனர். ஜியோவைப் போலவே, அதிவேகமாக வளர்ந்து வரும் இன்டர்நெட் சர்வீஸ் ப்ரொவைடர் நிறுவனம் தான் எக்ஸைடெல் (Excitel) நிறுவனம்.
இந்த நிறுவனம் தற்போது புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளனர். அது என்னவென்றால், அவர்களது பிராட்பேண்டில் 9 மாத திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாத கால சேவை முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்பது தான். மேலும் இந்த சலுகை எக்ஸைடெல் நிறுவனத்தின் 300 Mbps திட்டத்திற்கு (300 Mbps Plan) மட்டுமே பொருந்தும் என அறிவித்துள்ளனர்.
அதிலும், சுவாரசியமான ஒன்று என்னவென்றால் இந்த 300 எம்பிபிஎஸ் திட்டத்தில் 18 வகையான ஓடிடி (OTT) தளங்களை இலவசமாக அணுகலாம் எனவும் கூறி இருக்கின்றனர். இந்த 300 Mbps இண்டர்நெட் ஸ்பீட்டை வழங்கும் பிராட்பேண்ட் கனெக்ஷன் திட்டத்துக்கான விலை மாதம் ரூ.499 ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஜீ போன்ற 18 ஓடிடி தளங்களை இலவசமாக அணுகலாம் எனவும் மற்றும் 150 லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இது போன்ற 300 Mbps மாத விலை ரூ.600 முதல் தொடங்குகிறது. இதனால், ஜியோ ப்ரோட்பாண்ட் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களும், எக்ஸைடெலுக்கு வாடிக்கையாளர்கள் ஆகலாமா என ஆலோசித்து வருகின்றனர்.
மேலும், இன்டர்நெட் விரும்பிகள் எக்ஸைடெல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்திற்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். இதனால், வரும் காலத்தில் பிராட்பாண்ட் விரும்பிகள் எக்ஸைடெல் நிறுவனத்தை அணுகவத்திற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், இதனால் ஜியோ பிராட்பேண்ட் சந்தையில் சரிவை சந்திக்கலாம் எனவும் கருதப்படுகிறது.