16ஜிபி ரேம்..48எம்பி கேமரா..! உலகளவில் ஒப்போவின் புதிய பைண்ட் என்3 சீரிஸ்.!

Oppo Find N3

OPPOFindN3: கடந்த சில நாட்களாக ஃபோல்டபிள் மற்றும் ஃபிளிப் மாடல் ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் அறிமுகமாகிவருகிறது. அதன்படி, ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனமும் அதன் புதிய பைண்ட் என்3 சீரிஸை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வந்தது. இந்த சீரிஸில் பைண்ட் என்3, பைண்ட் என்3 ஃபிளிப் என இரண்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஒப்போ பேட் 2 உள்ளன.

இதில் அக்டோபர் 12ம் தேதி பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, பைண்ட் என்3 சீரிஸ் ஆனது அக்டோபர் 19 ஆம் தேதி உலகளவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் தற்போது பைண்ட் என்3 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

OPPO Find N3 Flip: ஆரம்பமே ரூ.12,000 தள்ளுபடி.! அதிரடி சலுகையுடன் ஒப்போவின் புதிய ஃபைண்ட் என்3 ஃபிளிப்.!

ஒப்போ பைண்ட் என்3

டிஸ்பிளே

பைண்ட் என்3 எனப்படும் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனில் 2268×2440 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 7.8 இன்ச் (19.86 செமீ) ஓஎல்இடி மெயின் டிஸ்ப்ளே மற்றும் 2484×1116 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்ட 6.3 இன்ச் ஓஎல்இடி கவர் டிஸ்பிளேவும் உள்ளது.

இந்த இரண்டு டிஸ்பிளேவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2800 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸைக் கொண்டுள்ளது. பைண்ட் என்3 ஃபிளிப்பில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.8 இன்ச் அமோலெட் மெயின் டிஸ்ப்ளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 3.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே உள்ளது.

பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போனில் அட்ரினோ 740 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் ஆனது பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் 40க்கும் மேற்பட்ட ஆப்ஸை பேக்கிரவுண்டில் இயக்க முடியும். இது ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான கலர் ஓஎஸ் 13.1-ல் இயங்குகிறது.

ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோஸ்கோப், காம்பஸ் போன்ற சென்சார்களும் உள்ளன. பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் ஏஆர்எம் இம்மார்டலிஸ்-ஜி715 எம்சி 11 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9200 எஸ்ஓசி சிப்செட் ஆனது பைண்ட் என்3 ஃபிளிப் ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ளது.

கேமரா

பைண்ட் என்3 ஸ்மார்ட்போனில் கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறம் 48 எம்பி வைட் அங்கிள் மெயின் கேமரா, 48 எம்பி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3X ஆப்டிகல் ஜூம் உடன் கூடிய 64 எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக உள்புறம் 20 எம்பி கேமரா மற்றும் வெளிப்புறம் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

JioBharat B1 4G: யுபிஐ ஆதரவுடன் அறிமுகமானது ஜியோவின் புதிய ஃபீச்சர் போன்.! விலை என்ன தெரியுமா.?

பேட்டரி

239 கிராம் எடை கொண்ட பைண்ட் என்3 ஸ்மார்ட்போனில் நீண்ட நேர பயன்பாட்டிற்காக 4,805 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை வேகமாக சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

இதனால் 42 நிமிடங்களில் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் க்ளோபெல் டாஸ்க்பார், பவுண்ட்லெஸ் வியூ, டூ-பிங்கர் ஸ்ப்ளிட் ஸ்கிரீன் மற்றும் ஆப் லைப்ரரி ஃபைல் பாக்கெட் போன்ற அம்சங்கள் உள்ளன.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

கிளாசிக் பிளாக் மற்றும் ஷாம்பெயின் கோல்ட் என இரண்டு வண்ணங்களில் அறிமுகமான பைண்ட் என்3 ஆனது 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த வேரியண்ட் $2,399 (கிட்டத்தட்ட ரூ.1,99,758) என்ற விலையில் விற்பனைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரீ-ஆர்டர் ஆனது நாளை அக்டோபர் 20ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan
DMK - Revanth Reddy