தொழில்நுட்பம்

MacBook Pro: 16 இன்ச் டிஸ்ப்ளே..48 ஜிபி ரேம்.எம்3 சிப்.! அறிமுகமானது ஆப்பிளின் புதிய மேக்புக் ப்ரோ.!

Published by
செந்தில்குமார்

MacBook Pro : ஆப்பிள் நிறுவனம் அதன் ‘ஸ்கேரி ஃபாஸ்ட்’ என்ற அறிமுக நிகழ்வை இன்று நடத்தியது. இந்த நிகழ்வில்  3 என்எம் (3nm) செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட புதிய எம்3 சிப்புடன் கூடிய மேக்புக் ப்ரோ மாடல்கள் மற்றும் ஐமேக்கையும் அறிமுகப்படுத்தியது. இதில் மேக்புக் ப்ரோவில் எம்3, எம்3 ப்ரோ மற்றும் எம்3 மேக்ஸ் சிப்புகளுடன் கூடிய, இரண்டு டிஸ்ப்ளே அளவு வேறுபாடுடன் கூடிய மூன்று வகைகள் உள்ளன.

டிஸ்பிளே

இந்த மேக்புக் ப்ரோ ஆனது 3456×2234 ரெசல்யூஷன் கொண்ட 16.2 இன்ச் (41.05 செ.மீ) அளவுள்ள லிக்விட் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. அதோடு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 முதல் 1,600 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதே போல 14.2 இன்ச் (35.97 செ.மீ) அளவிலான டிஸ்பிளே கொண்ட மாடலும் உள்ளது. இந்த டிஸ்பிளே 1 பில்லியன் நிறங்களை ஒன்றிணைத்துக் காட்டக்கூடியது.

பிராசஸர்

புதிய மேக்புக் ப்ரோ சீரிஸ் ஆனது 3 என்எம் (3nm) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய எம்3 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்புகளில் அதிக டிரான்சிஸ்டர்கள் சிறிய இடத்தில் நிரம்பியுள்ளன. இதனால் மேக்புக் வேகம் மற்றும் செயல்திறன் ஆனது அதிகமாக இருக்கும். இது எம்1 சிப்புடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கோர்களை (Performance core) கொண்டுள்ளது. இதில் மேக் ஓஎஸ் ஆனது உள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி

இதில் 1080 பிக்சல் பேஸ்டைம் எச்டி கேமரா உள்ளது. அதோடு சுமார் 22 மணிநேரம் வரை பயன்பாடு இருக்கக்கூடிய 100 வாட் ஹவர் லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய 140 வாட்ஸ் பவர் அடாப்டர் கொடுக்கபட்டுள்ளது. இது வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. அதோடு, எச்டிஎம்ஐ போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், பேக்லிட் மேஜிக் கீபோர்ட், வைஃபை 6இ, புளூடூத் 5.3 ஆகியவை உள்ளன.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

இந்த மேக்புக் ப்ரோவில் மொத்தமாக நான்கு வகை ரேம் + இரண்டு வகை ஸ்டோரேஜ், இரண்டு டிஸ்பிளே மற்றும் மூன்று வகை சிப்புடன் கூடிய ஒன்பது வேரியண்ட்கள் உள்ளன. அதன்படி,

  • 14 இன்ச் டிஸ்பிளே + எம்3 சிப் + 8 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்எஸ்டி கொண்ட வேரியண்ட் ரூ.1,69,900 என்ற விலையில் உள்ளது.
  • 14 இன்ச் டிஸ்பிளே + எம்3 சிப் + 8 ஜிபி ரேம் + 1 டிபி எஸ்எஸ்டி வேரியண்ட் ரூ.1,89,900 விலையிலும்,
  • 14 இன்ச் டிஸ்பிளே + எம்3 ப்ரோ சிப் + 18 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்எஸ்டி வேரியண்ட் ரூ.1,99,900 விலையிலும்,
  • 14 இன்ச் டிஸ்பிளே + எம்3 ப்ரோ சிப் + 18 ஜிபி ரேம் + 1 டிபி எஸ்எஸ்டி வேரியண்ட் ரூ.2,39,900 விலையிலும்,
  • 14 இன்ச் டிஸ்பிளே + எம்3 மேக்ஸ் சிப் + 36 ஜிபி ரேம் + 1 டிபி எஸ்எஸ்டி வேரியண்ட் ரூ.3,19,900 விலையிலும்,
  • 16 இன்ச் டிஸ்பிளே + எம்3 ப்ரோ சிப் + 18 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்எஸ்டி வேரியண்ட் ரூ.2,49,900 விலையிலும்,
  • 16 இன்ச் டிஸ்பிளே + எம்3 ப்ரோ சிப் + 36 ஜிபி ரேம் + 512 ஜிபி எஸ்எஸ்டி வேரியண்ட் ரூ.2,89,900 விலையிலும்,
  • 16 இன்ச் டிஸ்பிளே + எம்3 மேக்ஸ் சிப் + 36 ஜிபி ரேம் + 1 டிபி எஸ்எஸ்டி வேரியண்ட் ரூ.3,49,900 விலையிலும்,
  • 16 இன்ச் டிஸ்பிளே + எம்3 மேக்ஸ் சிப் + 48 ஜிபி ரேம் + 1 டிபி எஸ்எஸ்டி வேரியண்ட் ரூ.3,99,900 விலையிலும், விற்பனைக்கு உள்ளது.
Published by
செந்தில்குமார்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

7 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

9 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

10 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

10 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

11 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago