12ஜிபி ரேம், 50எம்பி கேமரா, 6000mAh பேட்டரி.! பட்ஜெட் விலையில் களமிறங்கியது விவோ ஒய்33டி & ஒய்78டி.!
Vivo Y33t & Y78t : ஒப்போ, ஹானர் போன்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களை போலவே விவோ நிறுவனமும் தனது ஸ்மார்ட்போனை இந்தியா, சீனா உட்பட உலக அளவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அதன் ஒய் சீரிஸில் இரண்டு மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் விவோ ஒய்33டி 4ஜி (Vivo Y33t 4G) மற்றும் விவோ ஒய்78டி (Vivo Y78t) ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் எந்தவித அறிவிப்பும் இன்றி அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது.
விவோ ஒய்33டி 4ஜி
டிஸ்பிளே
இந்த ஸ்மார்ட்போனில் 1612×720 ரெசல்யூஷன் கொண்ட 6.56 எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இது 16.7 மில்லியன் நிறங்களை ஒன்றாக சேர்த்து காட்டக்கூடியது. இதனால் படங்கள் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். அதோடு 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட் உள்ளதால் கேம் மற்றும் மல்டி டாஸ்க்கிங்கிற்கு ஏற்றதாக இருக்கும்.
பிராசஸர்
விவோ ஒய்33டி 4ஜி ஸ்மார்ட்போனில் மாலி-ஜி52 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட 64 பிட் ஆக்டா கோர் ஹீலியோ ஜி85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரிஜின் ஓஎஸ் 3 உள்ளது. பாதுகாப்பு அம்சமாக ஸ்கிரீன் லாக், சைடு மௌன்ட்டெட் பிங்கர் பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் உள்ளது.
கேமரா
கேமரா அமைப்பைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 4x டிஜிட்டல் ஜூம் கொண்ட 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி ப்ளர் கேமரா கொண்ட டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 2x டிஜிட்டல் ஜூம் கொண்ட 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நைட் சீன் போட்டோகிராபி, போட்டோகிராபி, ஸ்லோ மோஷன், டைம் லேப்ஸ் போட்டோகிராபி, ஜோவி ஸ்கேனிங், போர்ட்ரெய்ட், டைனமிக் போட்டோஸ் போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.
பேட்டரி
186 கிராம் எடை கொண்ட ஒய்33டி 4ஜி-யில் அதிக நேரம் பயன்பாட்டிற்காக 5000 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 15 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. அதோடு ஓடிஜி மூலமாக ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. பிராக்ஸிமிட்டி சென்சார், கிராவிட்டி சென்சார், லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
வைல்ட் க்ரீனரி, கிரிஸ்டல் பர்பிள் என இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ள விவோ ஒய்33டி 4ஜி ஆனது 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த 6 ஜிபி வேரியண்ட் ¥ 749.00 (கிட்டத்தட்ட ரூ.8,603) என்ற விலையில் விற்பனைக்கு உள்ளது.
விவோ ஒய்78டி
டிஸ்பிளே
இந்த ஸ்மார்ட்போனில் 2388×1080 ரெசல்யூஷன் கொண்ட 6.64 எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இது 16.7 மில்லியன் நிறங்களை ஒன்றாக சேர்த்து காட்டக்கூடியது. இதனால் படங்கள் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். அதோடு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சாதாரண பயன்பாட்டின் போது 120 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டும், கேம் விளையாடும்போது 240 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங் ரேட்டும் உள்ளதால் கேம் மற்றும் மல்டி டாஸ்க்கிங் செய்யும் பொழுது தடங்கல் ஏதும் இருக்காது.
பிராசஸர்
விவோ ஒய்78டி ஸ்மார்ட்போனில் அட்ரினோ 710 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட 64 பிட் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். அதோடு ஆண்ட்ராய்டு 13-ஐ அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரிஜின் ஓஎஸ் 3 உள்ளது. பாதுகாப்பு அம்சமாக ஸ்கிரீன் லாக், சைடு மௌன்ட்டெட் பிங்கர் பிரிண்ட் மற்றும் பேஸ் அன்லாக் உள்ளது.
கேமரா
இந்த போனில் 10x டிஜிட்டல் ஜூம் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி ப்ளர் கேமரா கொண்ட டபுள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 2x டிஜிட்டல் ஜூம் கொண்ட 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஃபோட்டோ மோட், போர்ட்ரெய்ட் மோட், நைட் சீன் போட்டோகிராபி, பனோரமா, டைனமிக் ஃபோட்டோ, ஸ்லோ மோஷன், டைம்-லாப்ஸ் ஃபோட்டோகிராபி, புரொபஷனல் மோட், டாகுமெண்ட் கரெக்ஷன், லென்ஸ் பேக், மைக்ரோ மூவி போன்ற கேமரா அம்சங்கள் உள்ளன.
பேட்டரி
199.6 கிராம் எடை கொண்ட விவோ ஒய்78டி-யில் அதிக நேரம் பயன்பாட்டிற்காக 6000 mAh திறன் கொண்ட லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 44 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் வசதி உள்ளது. இதிலும் ஓடிஜி மூலமாக ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. பிராக்ஸிமிட்டி சென்சார், கிராவிட்டி சென்சார், கைரோ, லைட் சென்சார், எலக்ட்ரானிக் காம்பஸ் போன்ற சென்சார்கள் உள்ளன.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
மூன் ஷேடோ கருப்பு, ஸ்னோ ஒயிட், டிஸ்டன்ட் மவுண்டன் க்ரீன் ஆகிய மூன்று வண்ணங்களில் வெளியாகியுள்ள விவோ ஒய்78டி ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்டில் அறிமுகமாகியுள்ளது.
இதில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்¥1199 (கிட்டத்தட்ட ரூ.13,630) என்ற விலையிலும், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ¥1299 (கிட்டத்தட்ட ரூ.14,767) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ¥1499 (கிட்டத்தட்ட ரூ.17,215) என்ற விலையிலும் விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 22 ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.