120 மணிநேர பிளே டைம்..50 எம்எஸ் லேட்டன்சி.! அறிமுகமானது நாய்ஸின் புதிய ஸ்டீரியோ இயர்பட்ஸ்.!

Buds X Prime

Noise Buds X Prime: ஸ்மார்ட் வாட்ச், வயர்லெஸ் இயர்பட்கள், புளூடூத் நெக்பேண்டுகள் போன்ற சாதனங்களை தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்கின்ற நாய்ஸ் நிறுவனம், அதன் புதிய வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் பிரைம் (Noise Buds X Prime) இயர்பட்ஸ் அறிமுகமாகியுள்ளது.

இந்த பட்ஸ் எக்ஸ் பிரைம் இயர்பட்ஸ் 120 மணி நேரம் பிளேடைமைக் கொண்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 சதவீத வால்யூமில் 8 மணிநேரம் மற்றும் சார்ஜிங் கேஸில் கூடுதலாக 112 மணிநேரம் வரை பாடல்கள் கேட்கமுடியும். இதை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 200 நிமிடங்கள் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சியோமியின் 14 சீரிஸ் & ஹைப்பர் ஓஎஸ்..! புதிய தொழில்நுட்பத்துடன் அதிரடி அறிமுகம்..எப்போ தெரியுமா.?

இதில் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேசன் (ENC) அம்சத்துடன் கூடிய குவாட் மைக் உள்ளது. இதனால் சத்தமான இடத்தில் கூட தெளிவாக கால் பேச முடியும். அதோடு 11 மிமீ ஆடியோ டிரைவர்கள் உள்ளதால் பேஸ் மற்றும் சிறந்த ஆடியோவை அனுபவிக்க முடியும். இதில் உள்ள புளூடூத் 5.3 மூலம் மொபைலில் எளிதாக இணைக்க முடியும்.

இது 10 மீட்டர் வரை இணைப்பில் இருக்கும். இயர்பட்ஸ் ஆனது 4.4 கிராம் எடையும், சார்ஜிங் கேஸ் ஆனது 42.4 கிராம் எடையும் கொண்டுள்ளது. நீர் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்க ஐபிஎக்ஸ்5 (IPX5) வாட்டர் ரெசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் டச் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த டச் கண்ட்ரோல் மூலம் பாடல், கால், சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்றவற்றைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம் .

ரூ.21,999 பட்ஜெட்டில் பக்காவான 5ஜி ஸ்மார்ட்போன்.! விவோவின் புதிய ஒய்200 5ஜி.!

கேம் பிரியர்களுக்காக 50எம்எஸ் லோ லேட்டன்சியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கேம் சவுண்ட் தாமதமாக கேட்காது. சில்வர் கிரே, ஷீன் கிரீன் அல்லது ஷாம்பெயின் ஒயிட் ஆகிய மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள நாய்ஸ் பட்ஸ் எக்ஸ் பிரைம் இயர்பட்ஸ் ரூ.1,399 என்ற விலைக்கு இந்தியாவில் கிடைக்கும்.

இதை இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் மூலமாகவும், நிறுவனத்தின் இணையதளமான கோநாய்ஸ் மூலமாகவும் வாங்கலாம். இதற்கு ஒரு வருட வாரண்ட்டி மற்றும் 7 நாட்கள் ரிப்ளேஸ்மென்ட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM
Pahalgam Attack Victim son
Saifullah Kasuri
cake inside Pakistan High Commission
PM Narendra Modi’s stern warning