12 ஜிபி ரேம்..13 எம்பி கேமரா..6.56 இன்ச் டிஸ்பிளே.! ஒப்போவின் நியூமாடல் எது தெரியுமா.?

OPPO A2m

OPPO A2m 5G: ஒப்போ நிறுவனம் அக்டோபர் 11ம் தேதி தனது ஏ-சீரிஸில் ஒப்போ ஏ2x 5ஜி ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து, அடுத்த மாடலான ஒப்போ ஏ2எம் என்ற புதிய 5ஜி ஸ்மார்ட்போனை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

இந்த ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போன் இன்னும் சந்தைகளில் அறிமுகமாகவில்லை. இருந்தாலும் அறிமுகத்திற்கு முன்னதாக ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போனின் உறுதிப்படுத்தப்படாத வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் சீனா டெலிகாம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

OPPO A18: பட்ஜெட் ரேஞ்சில் புதிய ஸ்மார்ட்போன்.! சைலண்டாக அறிமுகம் செய்த ஒப்போ.!

டிஸ்பிளே

ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் உடன் கூடிய எஃப்எச்டி+ ரெசல்யூஷன் கொண்ட 6.56 இன்ச் டிஸ்பிளேவுடன் வரலாம். இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸைக் கொண்டிருக்கலாம். இதில் 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத், வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் டூயல் சிம் கார்டு ஸ்லாட் போன்றவை இருக்கும்.

பிராசஸர்

இதில் மாலி-ஜி57 எம்பி2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக்கின் ஆக்டா-கோர் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் பொருத்தப்படலாம். அதோடு, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த கலர் ஓஎஸ் இருக்கலாம். பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டிருக்கலாம்.

கேமரா மற்றும் பேட்டரி 

கேமராவைப் பொறுத்தவரையில் எல்இடி ஃபிளாஷுடன் கூடிய 13 எம்பி கேமராவும், செல்ஃபிக்காக  5 எம்பி கேமராவும் பொறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி குறித்த தகவல் ஆனது வெளியாகவில்லை.

16ஜிபி ரேம்..48எம்பி கேமரா..! உலகளவில் ஒப்போவின் புதிய பைண்ட் என்3 சீரிஸ்.!

இருந்தாலும் 184.6 கிராம் எடை கொண்ட இந்த போன் 5,000 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டுடன் கூடிய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி இருக்கலாம்.

ஸ்டோரேஜ்

மேலும், ஸ்டாரி நைட் பிளாக் மற்றும் ஃப்ளையிங் ஃப்ரோஸ்ட் பர்பிள் ஆகிய இரண்டு நிறங்களில் உலா ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்படலாம். அதன்படி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று வேரியண்ட்களில் வரலாம்.

விலை

இதில் அடிப்படை மாடலான 6ஜிபி ரேம் வேரியண்ட் CNY 1499 (கிட்டத்தட்ட ரூ.17,052) என்ற விலையில் விற்பனை செய்யப்படலாம். அதே சமயம் 8 ஜிபி ரேம் வேரியண்ட் CNY 1799 (கிட்டத்தட்ட ரூ.20,465) என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் வேரியண்ட் CNY 2199 (கிட்டத்தட்ட ரூ.25,015) என்ற விலையிலும் சீனாவில் விற்பனைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Honor X50 GT: அடுத்த அறிமுகத்திற்கு ரெடியான ஹானர்.! எந்த மாடல் தெரியுமா.?

இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதிக் குறித்த தகவல் வெளியாகவில்லை. மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒப்போ ஏ2எம் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, கேமரா, பிராசஸர், ஸ்டோரேஜ் மற்றும் விலை போன்ற தகவல்கள் அனைத்தும் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்