12 ஜிபி ரேம்..10,090 mAh பேட்டரி..! கலக்கும் சாம்சங்கின் கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ.!
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஃபேன் எடிஷன் சீரிஸில் மூன்று சாதனங்களை அறிமுகப்படுத்தியது. அதில் கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன், கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ(எஸ்9 எஃப்இ, எஸ்9 எஃப்இ+) மற்றும் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ ஆகிய சாதனங்கள் அடங்கும். கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ ஆனது எஸ்9 எஃப்இ மற்றும் எஸ்9 எஃப்இ பிளஸ் என இரண்டு வகைகளில் உள்ளது.
டிஸ்ப்ளே
கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ ஆனது 10.9 இன்ச் அளவுள்ள எல்சிடி டிஸ்ப்ளேவையும், டேப் எஸ்9 எஃப்இ+ 12.4 இன்ச் அளவுள்ள எல்சிடி டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது. இந்த இரண்டு டேப்லெட்டுகளும் 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எஃப்எச்டி+ தெளிவுத்திறனைக் கொண்டுள்ளன.
பிராசஸர்
டேப் எஸ்9 எஃப்இ மற்றும் எஸ்9 எஃப்இ பிளஸ் ஆகிய இரண்டு டேப்லெட்களும் மாலி ஜி68 எம்பி5 ஜிபியுயுடன் இணைக்கப்பட்ட எக்ஸினோஸ் 1380 பிராசஸரைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன் யுஐ 5.1 இல் இயங்குகின்றன. இதில் ஆக்சிலரோமீட்டர், கைரோ சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார் உள்ளது.
கேமரா
கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ-ல் 8 எம்பி கொண்ட ஒற்றைக் கேமரா பின்புறத்தில் உள்ளது. ஆனால், எஸ்9 எஃப்இ பிளஸ் ஆனது பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் அங்கிள் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு டேப்லெட்டுகளிலும் வீடியோ அழைப்புகளுக்காக 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது.
பேட்டரி
நீண்ட நேர பயன்பாட்டிற்க்காக கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ-ல் 8000 mAh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எஸ்9 எஃப்இ பிளஸ்-ல் 10,090 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்டுடன் கூடிய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இதைவைத்து சில நிமிடங்களிலேயே பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் ஐயா முடியும்.
ஸ்டோரேஜ் மற்றும் விலை
மின்ட், சில்வர், க்ரே மற்றும் லாவெண்டர் என நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த டேப் எஸ்9 எஃப்இ மற்றும் டேப் எஸ்9 எஃப்இ பிளஸ் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. அதன்படி, டேப் எஸ்9 எஃப்இ-ல் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன.
அதேபோல, டேப் எஸ்9 எஃப்இ பிளஸ்-ல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12 ஜிபி ரேம் + 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள் உள்ளன. இதில் டேப் எஸ்9 எஃப்இ ஆனது $449 (ரூ. 37,300) என்ற விலையிலும், டேப் எஸ்9 எஃப்இ பிளஸ் ஆனது $699 (ரூ. 58,000) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டேப் எஸ்9 எஃப்இ மற்றும் கேலக்ஸி பட்ஸ் எஃப்இ ஆகியவை அக்டோபர் 10 முதல் விற்பனைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.