Samsung Galaxy Tab A9+: 11 இன்ச் டிஸ்பிளே..7040 mAh பேட்டரி..! அதிரடி காட்டும் சாம்சங்கின் புதிய டேப்.!

Galaxy Tab A9+

சாம்சங் நிறுவனம் அதன் ஏ9 சீரீஸில் புதிய டேப்லெட்டுகளை இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 மற்றும் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் என்ற இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக ஃபேன் எடிஷன் சீரிஸில் கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ-ஐ ரூ.37,300 என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. இதிலும் எஸ்9 எஃப்இ மற்றும் எஸ்9 எஃப்இ பிளஸ் என்ற இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9

டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 ஆனது 800 x 1340 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 8.7 இன்ச் (22.05 செ.மீ) அளவுள்ள எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எஃப்எச்டி+ தெளிவுத்திறனைக் கொண்டுள்ளன. இதற்கு முன்னதாக வெளியான கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ 10.9 இன்ச் அளவுள்ள எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இது டேப் ஏ9-ஐ விட 2.2 இன்ச் பெரிய டிஸ்பிளே ஆகும்.

பிராசஸர்

கேலக்ஸி டேப் ஆனது மாலி ஜி57 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன்யூஐ உள்ளது. முன்பு அறிமுகமான டேப் எஸ்9 எஃப்இ-ல் நிறுவனத்தின் சொந்த எக்ஸினோஸ் 1380 பிராசஸர் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைரோ, ஜியோமேக்னடிக், ஹால், லைட் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா

கேலக்ஸி டேப் ஏ9-ல் இருக்கக்கூடிய பின்புற கேமரா அமைப்பைப் பொறுத்தவரை 8 எம்பி கேமரா உள்ளது. அதேபோல முப்புறம் செல்ஃபிக்காக  2 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டால்பி அட்மோஸ் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளதால் பாடல்கள் மற்றும் படங்களை பார்க்கும்போது நல்ல அனுபவம் கிடைக்கும்.

பேட்டரி

366 கிராம் எடை கொண்ட இந்த டேப்லெட்டில் 5,100 mAh அளவிலான திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய யூஎஸ்பி சி போர்டுடன் கூடிய 15 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இதனால் இந்த டேப்லெட்டை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

டார்க் ப்ளூ, சில்வர், கிரேஎன மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த கேலக்ஸி டேப் ஏ9 ஆனது இரண்டு வேரியண்ட்டுகளில் உள்ளது. இதில் வைஃபையுடன் கூடிய 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.12,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. வைஃபை மற்றும் 5ஜி சப்போர்டுடன் கூடிய 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.15,999 என்ற விலையில் விற்பனைக்கு உள்ளது.

 

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ்

டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் ஆனது 1920 x 1200 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 11 இன்ச் (27.94 செ.மீ) அளவுள்ள எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 90 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எஃப்எச்டி+ தெளிவுத்திறனைக் கொண்டுள்ளன. ஆனால் இது டேப் எஸ்9 எஃப்இ பிளஸ்-ஐ விட 1.4 இன்ச் சிறியதாக இருக்கிறது.

பிராசஸர்

கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் ஆனது அட்ரினோ 619 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதிலும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஒன்யூஐ உள்ளது. கைரோ, ஜியோமேக்னடிக், ஹால், லைட் போன்ற சென்சார்கள் உள்ளன.

கேமரா

கேலக்ஸி டேப் ஏ9-ல் இருக்கக்கூடிய பின்புற கேமரா ஆனது 8 எம்பி அளவில் உள்ளது. அதேபோல முப்புறம் செல்ஃபிக்காக  5 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. குவாட் ஸ்பீக்கர்கள் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளதால் பாடல்கள் மற்றும் படங்களை பார்க்கும்போது நல்ல அனுபவம் கிடைக்கும்.

பேட்டரி

510 கிராம் எடை கொண்ட இந்த டேப்லெட்டில் 7040 mAh அளவிலான திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய யூஎஸ்பி சி போர்டுடன் கூடிய 15 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது. முந்தைய மாடலான டேப் எஸ்9 எஃப்இ பிளஸ்-ல் 10,090 mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியும், அதனை சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்டுடன் கூடிய 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஸ்டோரேஜ் மற்றும் விலை

டார்க் ப்ளூ, சில்வர், கிரேஎன மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த கேலக்ஸி டேப் ஏ9 பிளஸ் ஆனது இரண்டு வேரியண்ட்களில் உள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. இதில் வைஃபையுடன் கூடிய 128 ஜிபி வேரியண்ட் ரூ.20,999 என்ற விலையில் உள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை தற்போது வெளியிடப்படவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்