100 மணிநேர பேட்டரி பேக்கப்.. அசத்தலான ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது OnePlus!

OnePlus Watch 2

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட் வாட்சை அறிமுகம்படுத்தி உள்ளது. பார்சிலோனாவில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2024 என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய சாதனங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை பொது வெளியில் அறிமுகம் செய்து, அதனை காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Read More – Krutrim AI Chatbot-ஐ அறிமுகம் செய்தார் Ola நிறுவனர்!

அந்தவகையில், பிரபல பிராண்டான ஒன்பிளஸ், தனது இரண்டாவது ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2021ல் அறிமுகமான முதல் தலைமுறை ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் அடுத்த வெர்ஷனாக, ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) என்ற இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

OnePlus Watch 2-ஆனது அதன் முதல் தலைமுறை வாட்சை விட பல மேம்படுத்தல்களுடன் அறிமுகமாகியுள்ளது. இதில், நீண்ட நேரம் பேட்டரி பேக்கப், சிறந்த வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் சமீபத்திய Wear OS 4-இல் இந்த OnePlus Watch 2 இயங்குகிறது.

ஒன்பிளஸ் வாட்ச் 2 டிசைன்:

ஒன்பிளஸ் வாட்ச் 2 ஆனது 2.5D சபையர் படிக கவருடன் (sapphire crystal cover) வருகிறது. ஸ்மார்ட் வாட்சின் சேஸ் அமெரிக்க ராணுவ தரநிலையான MIL-STD-810H என்ற துருப்பிடிக்காத எஃகு மூலம் செய்யப்பட்டது. இதுபோன்று, IP68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பையும் கொண்டுள்ள அந்த வாட்ச் சுமார் 80 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் வாட்ச் 2-ன் சிறப்பம்சங்கள்:

ஒன்பிளஸ் வாட்ச் 2, 466 x 466 பிக்சல்கள் மற்றும் 600 nits வரை பிரைட்னெஸ் கொண்ட 1.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் W5 SoC உடன் BES 2700 MCU செயல்திறன் சிப்செட்டுடன் ஸ்மார்ட்வாட்ச் இயங்குகிறது.  இந்த வாட்ச் 2GB RAM மற்றும் 32GB ரோமை கொண்டுள்ளது.

இந்த வாட்சில் 500 mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது, ஸ்மார்ட் முறையில் பயன்படுத்தினால் 100 மணிநேர பேட்டரி பேக்கப் இருக்கும் என்றும் ‘அதிகம் பயன்படுத்தினால்48 மணிநேர பேட்டரி பேக்கப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. 7.5W VOOC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று OnePlus கூறுகிறது.

OnePlus வாட்ச் 2 விலை:

இந்தியாவில் ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் Amazon, Flipkart, Reliance, Croma மற்றும் OnePlus Experience ஸ்டோர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆன்லைன் தளங்களிலும் 4 மார்ச் 2024 அன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி கார்டு மூலம் பணம் செலுத்தி, வாட்ச் 2-வை வாங்கினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடியையும் OnePlus வழங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்