100 கோடி ஆதார் கணக்குகள் பாதுகாப்பு குறைபாடுகளுடன் உள்ளது எனப் புகார்!
டிரிப்யூன் நாளிதழின் செய்தியாளர் ஒருவர் அடையாளம் தெரியாத முகவரை வாட்ஸ் மூலம் தொடர்பு கொண்டு ஆதார் தொடர்பான லாக் இன் ஐ.டி.யையும் பாஸ்வேர்டையும் பெற்றதாகவும், இதற்காக பே டி.எம். மூலம் 500 ரூபாய் செலுத்தியதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு மூலம் நூறு கோடி ஆதார் எண்கள், பெயர், முகவரி, புகைப்படம், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை எளிதில் பெற்றுவிட முடியும் என்று அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 300 ரூபாயில் அந்த முகவர் ஒரு எந்திரத்தைக் கொடுத்ததாகவும் அதனைக் கொண்டு ஆதார் அட்டையே தயாரித்துவிட முடியும் என்றும் அந்த நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மறுத்துள்ள ஆணையம் ஆதார் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று விளக்கம் அளித்துள்ளது.
source: dinasuvadu.com