வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை!மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி
வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி அளித்துள்ளது.
முன்னதாக வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு அரசு அறிவுறுத்தியிருந்தது.தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வாட்ஸ் அப் மூலம் அண்மையில் குழந்தைகள் கடத்தல் செய்தி அதிகமாக பரவி வருகின்றது.மேலும் இதனால் வட மாநிலவத்தர்கள் அதிகம் தாக்கப் படுகின்றனர்.உயிர் பலியும் அரங்கேறி வருகின்றது.பல வந்தந்திகளும் பரவி வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திருக்கு போலியை தடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.
தற்போது இதன் விளைவாக வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி அளித்துள்ளது.மேலும் தவறான தகவல்கள், வதந்திகளைத் தடுப்பது சவாலான பணியாக இருக்கிறது என்று வாட்ஸ் அப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் சுமார் 20 கோடிக்கும் மேற்பட்டோர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.