ரெட்மி நோட் 6 ப்ரோ மாடல் இந்த நாளில் 1,500 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது!
ரெட்மியின் நோட் 5 ப்ரோவிற்கு அடுத்த மாடலாக வெளிவந்துள்ளது நோட் 6 ப்ரோ. பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லாமல், கேமிராவில் மட்டும் சிறிய மாறுதலை செய்து வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் செலஃபீ கேமரா டூயல் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது.
இந்த மாடல் பிளிப்கார்ட், MI .COM மற்றும், ரெட்மி ஸ்டோரிலும் கிடைக்கும். இதன் விலை 4ஜிபிராம் / 64ஜிபி ரோம் வசதி அடங்கிய போன் 13,999/- எனவும், 6ஜிபி/64ஜிபி ரோம் வசதி கொண்ட போன் 15,999/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே மாடல்கள் ஃப்ரைடே ஃபிளாஸ் சேலில் 12,999/- மற்றும் 14,999/- எனவும் இருந்தது. அதேபோல எச்டிஏஃப்சி கிரெடிட் / டெபிட் கார்ட் இருந்தால் 500 ரூபாய் உடனடி ஆஃபர்.\
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்டி+ஐபிஎஸ் எல்.இ.டி ஸ்கீரின் டிஸ்பிளே 1080*2280 பிக்சலைக் கொண்டது. இதன் பிரகாசம் 500 என்.ஐ.டிஎஸ் ஆகும். 19:9 என்ற வீதத்தில் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.
முன்பக்கம் இருக்கும் கேமிரா 20 மெகா பிக்சலுடன் பிரைமரி சென்சாரைக் கொண்டுள்ளது மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட செகண்டரி சென்சாருடன் 4இன் 1 சூப்பர் பிக்சல் மற்றும் ஏஐ ஃபேஸ் அனலாக் வசதியைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் 12 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாருடன் 1.4 மைக்ரான் பிக்சல் மற்றும் ஏஐ 2.0-வைக் கொண்டுள்ளது.
DINASUVADU