ரீசார்ஜ் செய்யாத வாடிக்கைகையாளர்களின் இன்கமிங்கை தடை செய்ய கூடாது! டிராய் எச்சரிக்கை!!

Default Image

சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடஃபோன் , ஐடியா போன்ற செல்போன் நெட்ஒர்க் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைக்க மாதம் 35 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்பவர்களை நீக்கவும், அவர்களுக்கு இன்கமிங்கை நிறுத்தவும் செய்தது.

இதனால் பலர் பாதிக்கப்பட்டு இந்திய தோலை தொடர்பு ஒழுங்கு அமைப்பான டிராயிடம் (TRAI) பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த புகாரின் பெயரில் தற்போது தெரிவித்துள்ள டிராய், வாடிக்கையாளர்கள் குறைந்த அளவு ரீசார்ஜ் செய்யாததானால் இன்கமிங்கை நீக்க கூடாது எனவும், அப்படி நிறுத்த போவதாக இருந்தால் 72 மணி நேரத்திற்கு முன்பாகவே வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படவேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இந்த பிரச்சனை தற்போது வரவில்லை. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பல முன்னணிநிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. பலர் தங்களது ஸ்மார்ட் போனில் முதல் சிம்மாக ஜியோவை உபயோகப்படுத்திவிட்டு, இரண்டாவது சிம்மாக இன்கம்மிகிற்க்காக மற்ற மொபைல் நெட்ஒர்க் சிம்மை உபயோகப்படுத்துகின்றனர். இதனால் பாதிப்படைந்த முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நிலைநிறுத்த இவ்வாறு செய்த் வந்தனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்