மாற்றுத்திறனாளிகளும் வீடியோ கேம் விளையாடும் வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய கருவி அறிமுகம்..!
மாற்றுத்திறனாளிகளும் வீடியோ கேம் விளையாடும் வகையில் எக்ஸ் பாக்ஸ் அடாப்டிவ் கண்ட்ரோல்லர் ((Xbox adaptive controller)) என்ற கருவியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கை, கால் பிரச்சனை உடைய மாற்றுத் திறனாளிகள் வீடியோ கேம் விளையாடுவதில் சிரமங்கள் இருப்பதைக் கவனத்தில் கொண்டு இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் படி கை, கால்கள் மூலம் இயக்கியபடி வீடியோ கேம் விளையாடும் எக்ஸ் பாக்ஸ் அடாப்டிவ் கண்ட்ரோல்லர் கருவியை மைக்ரோசாஃப்ட் கண்டுபிடித்துள்ளது. இதன் விலை 6 ஆயிரத்து 800 ரூபாய் ஆகும். விரைவில் இது விற்பனைக்கு வருகிறது.