மணிக்கு ஆயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் விமானத்தைத் தயாரிக்க நாசா, லாக்கீட் மார்ட்டின் நிறுவனங்கள் முடிவு…!
நாசா, லாக்கீட் மார்ட்டின் நிறுவனங்கள் இணைந்து மணிக்கு ஆயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் விமானத்தைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளன.
வணிக நோக்கில் பயணிகள் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் சூப்பர்சோனிக் விமானத்தைத் தயாரிக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும், போர் விமானத் தயாரிப்பு நிறுவனமான லாக்கீட் மார்ட்டினும் திட்டமிட்டுள்ளன. இதற்காக லாக்கீட் மார்ட்டினுக்கு ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாயை நாசா வழங்க உள்ளது.
எக்ஸ் பிளேன் எனப்படும் சூப்பர்சோனிக் விமானம் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் தயாரிக்கப்படும். நிலப்பகுதிக்கு மேல் சூப்பர்சோனிக் விமானங்கள் இயங்க அமெரிக்காவில் அனுமதி கிடையாது. இதனால் புதிதாகத் தயாரிக்கப்படும் எக்ஸ் பிளேனில் இரைச்சல் குறைவாக உள்ளதைக் காட்டி நிலப்பகுதிக்கு மேல் இயக்க அனுமதி பெறவும் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.