போனை ஹேக் செய்தவர்களுக்கு 50,000 டாலர் பரிசளித்த ஐபோன் நிறுவனம்!
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஐபோன் எக்ஸ் மாடலை ஹேக் செய்பவருக்கு 50,000 டாலர் பரிசளிப்பதாக அறிவித்திருந்தது.. அதில் இருவர் வெற்றி பெற்று பரிசு வென்றனர்.
ஆப்பிள் நிறுவனம் தான் புதிதாக வெளியிட்ட ஐ போன் எக்ஸின் பாதுகாப்பு தன்மையை வாடிக்கையாறர்களுக்கு தெரிவிக்க ஓர் போட்டி நடத்தியது. அதில் ஐபோனில் அழிக்கப்பட்ட போட்டோக்களை திரும்ப ஹேக் செய்து எடுக்கும் போட்டி நடைபெற்றது.
அந்த போட்டியில் கலந்துகொண்ட அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் ஜூ, அமட் காமா ஆகிய இருவரும் ஹேக் செய்து அழிக்கப்பட்ட தரவுகளை திரும்ப ஹேக் செய்து எடுத்து விட்டனர்.
இது ஆப்பிள் நிறுவனத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் கூறுகையில், அழிக்கப்பட்ட தரவுகள் 30 நாட்கள் போனிலேயே இருக்குமாம். பிறகுதான் அழியுமாம். இன்னொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், இதற்கு இன்னமும் ஆப்பிள் நிறுவனம் தீர்வு கண்டுபிடிக்காமல் உள்ளது.
DINASUVADU