புதிய முயற்சியில் சி.ஐ.ஏ!கைகொடுக்குமா உளவு ரோபோக்கள் ?

Default Image

அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோக்கள்  பணியமர்த்தப்பட உள்ளது. தானாக செயற்கையாக சிந்திக்கும் திறன் கொண்ட, கம்ப்யூட்டர் சாப்ட்வேர்தான் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும்.

தமிழில் இதை செயற்கை நுண்ணறிவு என்று சொல்வார்கள்.அமெரிக்கா இந்த ரோபோக்களை தற்போது  உளவு அமைப்பில் ரோபோக்களை பணியமர்த்த உள்ளது.

முன்னதாக சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முக்கியமான சில பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க ரோபோக்களை பணிக்கு அமர்த்தி இருக்கிறார்கள் . அதை அமெரிக்கா அடுத்த கட்டத்துக்கு விரிவுபடுத்த இருக்கிறது.

Image result for cia artificial intelligence robot america

இதுவரை அமெரிக்காவில் சிஐஏ நடத்தும் கண்காணிப்பு பணிகளில் மனிதர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டு வந்தார்கள். தினமும் நடக்கும் விஷயங்களின் வீடியோக்களை ஆராய்வது தொடங்கி குற்றவாளிகள் இருக்கும் வீடியோக்களை, சாலையில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை எல்லாவற்றையும் தற்போது ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் செய்ய இருக்கிறது. ஆம் இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்கள்தான் இனி இந்த சிறிய ரக உளவு வேலைகளை பார்க்கும். வேறு நாட்டிற்கு சென்று, அங்கு மறைந்து வாழ்ந்து செய்யப்படும் கஷ்டமான உளவு வேலைகளை மட்டுமே இனி மனிதர்கள் செய்வார்கள் என்று சிஐஏ அமைப்பின் அறிவியல் குழு துணை இயக்குனர் டான் மேவ்ரிக்ஸ் கூறியுள்ளார்.

தற்போது அமெரிக்கா, இந்த வகை ரோபோக்களை உருவாக்கும் பணியில் சிஐஏ வை களமிறக்கி இருக்கிறது. பென்டகன் உதவியுடன் இன்னும் சில மாதங்களில் இது பயன்பாட்டிற்கு வரும். பின் அந்த ரோபோட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி அளித்து இந்த வருட இறுதிக்குள் பணிக்கு அமர்த்துவார்கள். மனிதர்களின் முகங்களை இந்த ரோபோட்கள், மனிதர்களை விட வேகமாக சோதனை செய்து முடிவுகளை ஆராய முடியும் என்று சிஐஏ கூறியுள்ளது.

இந்த ரோபோக்களை ராணுவ தளவாடங்களிலும் பணிக்கு அமர்த்த இருக்கிறார்கள். இது வேவு பார்க்கும் வேலையை அப்படியே தலைகீழாக செய்து, யாராவது வானத்தில் இருந்து, ஆளில்லா ட்ரோன் வகை கேமராக்களில் வேவு பார்க்கிறார்களா என்று கண்டுபிடிக்கும். இதை உருவாக்கும் பணியிலும் சிஐஏ இறங்கியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்