புதிய அம்சங்களுடன் நூபியா வி18 (Nubia v18) வெளிவருகிறது..!!
சீன ஸ்மார்ட்போன்களின் மோகம் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சீன ஸ்மார்ட்போன்களின் விலைப் பொறுத்தவரை குறைவாக இருப்பதால் மக்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர். தற்சமயம் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நூபியா நிறுவனத்தின் ‘வி18″(Nubia v18.) சாதனத்தின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டீசர் ஆன்லைனில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நூபியா வி18 சாதனம் பொதுவாக 6-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது ‘வி18″ ஸ்மார்ட்போன் மாடல்.
கைரேகை சென்சார் போன்ற வசதிகளையும் கொண்டுள்ளது இந்த நூபியா வி18 ஸ்மார்ட்போன். வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
நூபியா வி18 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. நூபியா வி18 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.