பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட 13 முக்கிய செயலிகள்!!
கூகுள் பிளே ஸ்டோரில் நாம் ஏதேனும் கேம்களை இன்ஸ்டால் செய்கையில் அந்த ஆப் இன்னொரு ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்வது ஒரு சில ஆப்களில் நடந்துவரும், அப்படி மால்வேரிகளை இன்ஸ்டால் செய்த 13 ஆப்களை கூகுள் பிளே ஸ்டார் தனது பக்கத்திலிருந்து நீக்கி உள்ளது. அந்த ஆப்கள் ஒவ்வொன்றும் 5 லட்சம் பேரால் இன்ஸ்டால் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நீக்கப்பட்ட ஆப்களில், பிரபல கேம்களாக இருக்கும் டிரக் சிமுலேட்டர், ஃபயர் டிரக் சிமுலேட்டர், லக்சரி கார் டிரைவிங் சிமுலேட்டர் மற்றும் இன்னும் பிற செயலிகள் இடம்பெற்று இருந்தன. இந்த செய்தியை, இசெட் (ESET) பிரபல ஆன்லைன் பாதுகாப்பு ஆய்வு நிறுவனமாத்தின் பாதுகாப்பு ஆய்வாளரான லுகாஸ் ஸ்டிஃபான்கோவின் தான் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
நீக்கப்பட்ட அணைத்து செயலிகளையும் லூயிஸ் ஓ பின்டோ என்ற ஒற்றை டெவலப்பர் உருவாக்கியதாகும். இந்த செயலிகள் கேம் சென்டர் எனும் ஆப்பை இன்ஸ்டால் செய்ய சொல்லி கட்டாயபடுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த புகார் ஏற்கனவே நிறைய தடவை வந்துள்ளது. கடந்தாண்டு மட்டுமே 3.5 கோடி ஹார்டுவேர்கள் கூகுளால் பாதிக்கப்பட்டுள்ளன.
DINASUVADU