குறைந்த விலையில் நிறைவான தரம் என்று சொல்லும் அளவிற்கு ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற நிறுவனம் சியோமி. அந்நிறுவனம் தற்போது புதிதாக எல்இடி 4A ப்ரோ டிவியை பிரத்யோகமாக வடிவமைத்துள்ளது.
சியோமியின் தனித்துவமான கண்டென்ட் டிஸ்கவரி இன்ஜினுடன் இந்த டிவி வடிவமைக்கப்பட்டுள்ளதால், 15க்கும் மேற்பட்ட சோர்ஸ்கள் மூலம், மணிக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். மேலும், எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 8.1 நவீனப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் 1080 பேனல் வீடியோ அவுட் புட்டுடன் இயங்குதிறன் கொண்டது. இதன் விலை 29,999/- என நிர்ணயம் செய்யப்பட்டு சியோமி தளத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தரமான வைஃபை வசதி இடம்பெற்றுள்ளது ஆதலால் இன்டர்நெட் ஸ்பீடாக இருந்தால் தரமான விடியோக்களை துல்லியமாக பார்க்க முடியும். எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 1080 வீடியோ வெளியீட்டுத் திறனும் வண்ணச்சாரலையும், கண்ணியமான பொலிவையும் தருகிறது. டி.டி.எச் மற்றும் எச்.டி ஒலிபெருக்கி வசதிகளுடன் டி.வி இருக்கும் அறை அழகிய ஓசைகளால் நிரம்புகிறது.புளூ டுத் ஸ்பீக்கர், சவுண்ட் பார் இல்லாமல் நல்ல ஒலிகளை கேட்க முடியும். 14 வித்தியாசமான கண்டென்களில் மணிக்கு 7 ஆயிரம் இசையை உள்வாங்கிக் கொள்ளலாம். ஹாட் ஸ்டார், ஹங்கமா, சோனி லிவ், வூட், ஈரோஸ் நவ், ஜீ5, ஜியோ சினிமா, ஹூக், எபிக் ஆன் சேவைகளை உள்ளடக்கியது.
DINASUVADU
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…