தகவல் தொழில்நுட்ப துறையில் அடுத்த அதிரடி…!!!! இணைய நடவடிக்கைகளுக்கு இனி கடும் கட்டுப்பாடு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிரடி நடவடிக்கை…!!!
தொழில்நுட்ப வளர்ச்சி விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துள்ள இந்த நாகரீக உலகில் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக வலைதளங்களில் இனம் மற்றும் மதம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களின் காரணமாகவே பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் தோற்றம் பெறுகின்றன.
ஆகையால் அவற்றை தடுக்கும் நோக்குடனே சட்ட விதிகளில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சுட்டிகாட்டியுள்ளது.அதனை இணைத்தளத்தில் வெளியிட்டு, மக்களின் கருத்தினை 15ஆம் தேதிக்குள் பெற்றுகொள்ளவுள்ளதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்த விசயத்தில் மக்களின் கருத்தின் அடிப்படையில் இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த தகவல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
DINASUVADU.