ட்விட்டர் கருத்து மோதலால் தலைவர்களின் ட்விட்டர் பக்கம் முடக்கபடுவதில்லை! ட்விட்டர் விளக்கம் …
உலகத் தலைவர்களின் கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருந்தாலும் அதுபற்றிப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளவும் விவாதிப்பதற்கும் ஏதுவாக அவர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்படுவதில்லை என டுவிட்டர் சமூக வலைத்தளம் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பட்டன் தன்னிடம் இருப்பதாகவும், அது வடகொரியாவிடம் இருப்பதைவிடப் பெரியதும், திறன்மிக்கதும் ஆகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
கடுமையான கருத்துக்களை வெளியிடும் தலைவர்களின் டுவிட்டர் பக்கங்களை முடக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலளித்துள்ள டுவிட்டர் நிறுவனம், தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பொதுமக்கள் தெரிந்துகொண்டு அது குறித்து விவாதிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களின் டுவிட்டர் பக்கங்களை முடக்குவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
source: dinasuvadu.com