டிக் டாக்கிற்கு போட்டியாக புதிய ஆப்ளிகேஷனை களமிறக்கும் பேஸ்புக்!
நமக்கு பிடித்த பாடலுக்கு நடனம் ஆடுவது, பிடித்த பஞ்ச் டயலாக்கை வாயசைத்து பேசுவது, போர் அடித்தால் அடுத்தவர் பேசி வைத்திருககும் சேட்டை வீடியோக்களை பார்த்து மகிழ்வது என ஸ்மார்ட் போன் வாசிகளை ரெம்பவும் கவர்ந்து வருகிறது டிக் டாக் அப்க்ளிகேஷன். இந்த அப்ளிகேஷன் இல்லாத ஸ்மார்ட் போன் இல்லாத ஸ்மார்ட் போன் இல்லை எனும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்து விட்டது.
இந்த போட்டியை சமாளிக்க தற்போது பேஸ்புக் களமிறங்கியுள்ளது. டிக் டாக் அப்ளிகேஷனுக்கு போட்டியாக லஸ்ஸோ எனும் புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. அதிலும் டிக் டாக் போல பிடித்த பாடலுக்கு நடனம் ஆடுவது, பிடித்த டயலாக்கை பேசுவது என அனைத்து வசதிகளும் இதிலும் உள்ளது. இதில் ஒரு கெட்ட செய்தி என்னவென்றால் இந்த அப்ளிகேஷன் தற்போது அமெரிக்காவில் தான் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த அப்ளிகேஷன் இந்தியாவில் லாஞ்ச் ஆகவில்லை.
DINASUVADU