ஜியோக்கு போட்டியாக அதிரடி சலுகைகளை அறிவித்துள்ள ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடோஃபோன்!!!
இந்திய தொலைதொடர்பு கட்டுபாட்டுதுறையான (TRAI) சமீப்த்தில் ஓர் அறிவிப்பை அறிவித்துள்ளது. அதன்படி, மாதம்.குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகையை ரீசார்ச் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தியுள்ளதாக வந்த புகாரின் பெயரில், இனி அந்த.மாதிரி முன்னறிவிப்பின்றி செய்யகூடாது என்றும், இன்கம்மிங்கை கட் செய்யும் முன் 75 நாட்களுக்கு முன்னரே எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியது.
இன்று பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் புதிய ஆஃபர்கள் அறிவித்துள்ளன. அதன்படி, பிஎஸ்என்எல் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு 299 ரூபாய்கு 45GB நெட்டை 8 எம்பிபிஎஸ் வேகத்தில் கொடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச தொகையான 28 ரூபாய்கான ரீசார்ச் திட்டத்தினை 28 நாள் வேலிடிடட்டியுடன் அறிமுகபடுத்தியுள்ளது. மேலும் 245 ரூபாய்கும் புதிய திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது.
வோடபோன் நிறுவனமும் 159 ரூபாய்க்கு தினமும் 1 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரிலயன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் இன்னும் எந்தவித ஆஃபரும் அறிவிக்காமல் உள்ளது.
DINASUVADU