சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4(Galaxy Tab S4) விரைவில் இந்தியாவிலும்..!
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்4(Galaxy Tab S4) சாதனத்தின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் டேப் எஸ்4 சாதனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று சாம்சங் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் டேப் எஸ்4 பட்ஜெட் விலையில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 10.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பினபு 1600 x 2560 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் கொண்டவையாக உள்ளது டேப் எஸ்4, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த டேப் மாடல் வெளிவரும்.
கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவரும். பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் கேலக்ஸி டேப் எஸ்4. கேலக்ஸி டேப் எஸ்4 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த சாதனம் வெளிவரும். டேப் எஸ்4 சாதனத்தில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 6மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக எல்டிஇ வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. கேலக்ஸி டேப் எஸ்4 சாதனத்தில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.