குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்டிய இந்திய தொலைதொடர்பு நிறுவனம்…!!! மற்ற நிறுவனங்களை மடக்கிய அந்த நிறுவனம்…!!!! மூக்கின் மேல் விரலை வைக்கும் மற்ற நிறுவனக்கள்…!!!

Published by
Kaliraj
இந்தியர்கள்அனைவருக்கும் எட்டாக்கனியாக இருந்த இணையதள சேவையை சாமானியருக்கும் கொண்டு சென்று சேர்த்த பெருமை ஜியோ நிறுவனத்தையே சேரும். இந்த நிறுவனம் தனது அதிரடி சலுகைகளை வழங்கியதன் விளைவாக அனைத்து நிறுவனங்களும் தங்களது அதிகப்படியான விலையிலிருந்து  இறங்கி சாமனியரும்  பயன்படுத்தும் வகையில் குறைத்தனர்.இதற்க்கு முக்கிய காரணம் ஜியோ நிறுவனமாகும்.
இந்த   ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இந்த காலாண்டில் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்துள்ளது.இந்த வளர்ச்சி முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 12.4 சதவிகிதம் அதிகமாகும். வருடாந்திர அடிப்படையில் 50.9 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. மூன்றாவது காலாண்டை பொருத்த வரை ஜியோவின் நிகர லாபம் ரூ.831 கோடியாகும்.
இது காலாண்டு வாக்கில் 22.1 சதவிகிதமும், வருடாந்திர அடிப்படையில் 65 சதவிகிதம் அதிகம் ஆகும்.இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜியோவின் சேவை வருவாய் மட்டும் 12.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.12,252 கோடி ஈட்டியிருக்கிறது.கடந்த  டிசம்பர் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய காலாண்டு வரை ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.23 கோடியாக இருந்தது.மேலும் இந்நிறுவனம் ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி துவங்கியது. இதைத் தொடர்ந்து நாடு முழுக்க சுமார் 1400 நகரங்களில் இருந்து ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இநிறுவனத்தின் குறுகிய கால வளர்ச்சியானது  மற்ற நிறுவங்களை மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு  உள்ளது என  வணிக நோக்கர்கள் கருதுகின்றனர்.
DINASUVADU.
Published by
Kaliraj
Tags: Jiotamilnews

Recent Posts

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

1 minute ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

43 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

1 hour ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

2 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

2 hours ago

அரசியலுக்கு எப்போது? ‘இதுவே நல்லா இருக்குனே’ ரூட்டை மாற்றிய நடிகர் சூரி.!

திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…

3 hours ago