குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்டிய இந்திய தொலைதொடர்பு நிறுவனம்…!!! மற்ற நிறுவனங்களை மடக்கிய அந்த நிறுவனம்…!!!! மூக்கின் மேல் விரலை வைக்கும் மற்ற நிறுவனக்கள்…!!!
இந்தியர்கள்அனைவருக்கும் எட்டாக்கனியாக இருந்த இணையதள சேவையை சாமானியருக்கும் கொண்டு சென்று சேர்த்த பெருமை ஜியோ நிறுவனத்தையே சேரும். இந்த நிறுவனம் தனது அதிரடி சலுகைகளை வழங்கியதன் விளைவாக அனைத்து நிறுவனங்களும் தங்களது அதிகப்படியான விலையிலிருந்து இறங்கி சாமனியரும் பயன்படுத்தும் வகையில் குறைத்தனர்.இதற்க்கு முக்கிய காரணம் ஜியோ நிறுவனமாகும்.
இந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் டிசம்பர் 31, 2018 வரையிலான மூன்றாவது காலாண்டு வருவாய் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இந்த காலாண்டில் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.10,383 கோடியாக அதிகரித்துள்ளது.இந்த வளர்ச்சி முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 12.4 சதவிகிதம் அதிகமாகும். வருடாந்திர அடிப்படையில் 50.9 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. மூன்றாவது காலாண்டை பொருத்த வரை ஜியோவின் நிகர லாபம் ரூ.831 கோடியாகும்.
இது காலாண்டு வாக்கில் 22.1 சதவிகிதமும், வருடாந்திர அடிப்படையில் 65 சதவிகிதம் அதிகம் ஆகும்.இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது ஜியோவின் சேவை வருவாய் மட்டும் 12.4 சதவிகிதம் அதிகரித்து ரூ.12,252 கோடி ஈட்டியிருக்கிறது.கடந்த டிசம்பர் 31, 2018 வரையிலான காலக்கட்டத்தில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28.01 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய காலாண்டு வரை ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 25.23 கோடியாக இருந்தது.மேலும் இந்நிறுவனம் ஜியோவின் ஜிகாஃபைபர் சேவைகளை கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி துவங்கியது. இதைத் தொடர்ந்து நாடு முழுக்க சுமார் 1400 நகரங்களில் இருந்து ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்த பெரும்பாலானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இநிறுவனத்தின் குறுகிய கால வளர்ச்சியானது மற்ற நிறுவங்களை மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவிற்கு உள்ளது என வணிக நோக்கர்கள் கருதுகின்றனர்.
DINASUVADU.