ஒருபுறம் அதிரடியாக உயர்ந்த ஃபேஸ்புக் நிறுவனத்தின் லாபம்!மறுபுறம் களவு செய்ததற்காக விளக்கம் கேட்கும் பிரிட்டன்!
பிரிட்டன் நாடாளுமன்ற ஊடகக் குழு,தரவுகளைப் பாதுகாக்கும் விதிகளை மீறியதற்காக பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர் மார்க் சுக்கர்பெர்க் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. பேஸ்புக்கில் உறுப்பினராக உள்ளவர்களின் தரவுகளை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துக்குக் கொடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் ஊடகக் குழு, பேஸ்புக் தலைமைச் செயல் அலுவலர் மார்க் ஜுக்கர்பெர்க்கை நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டது. அவருக்குப் பதிலாக பேஸ்புக்கின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி மைக் ஸ்க்ரோபர் நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கம் அளித்தார். அப்போது அனைத்து வினாக்களுக்கும் அவர் முழுமையான விடையளிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மே 24ஆம் தேதி மார்க் ஜுக்கர்பெர்க் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என பிரிட்டன் நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.