ஏர்டெல் டிவி செயலியின் மீட் காலா, செம கூலா என்கிற போட்டியில் வெற்றிபெறுபவர்கள் ‘காலா’ படக் குழுவினரை சந்திக்கலாம். மேலும் ஒவ்வொரு மணிநேரமும் ‘காலா’ திரைப்பட டிக்கெட்டுகளையும் பரிசாகப் பெறலாம். இதற்காக ‘காலா’ பெயரில் ப்ரீபெய்டு பேக்குகள் சலுகையுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சலுகையில் ‘காலா’ திரைப்பட நடிகர்கள் மற்றும் குழுவினரின் ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள் இந்த பேக்கில் கிடைக்கும். பரபரப்பான காட்சிக்குப் பின்னால் உள்ள நிகழ்வுகள் போன்றவற்றையும் பிரத்யேகமாக பயனர்கள் இலவசமாகத் தரவிறக்கம் பெறுவதற்கு வகை செய்துள்ளது.
மீட் காலா, செம கூலா என்கிற வினா விடைப் போட்டியில் வாடிக்கையாளர்கள் பங்குபெறலாம். ஒவ்வொரு மணிநேரமும், ‘காலா’ திரைப்பட டிக்கெட்டுகள் மற்றும் ‘காலா’ நடிகர்கள் மற்றும் குழுவினரை சந்திப்பதற்குரிய வாய்ப்பு உள்ளிட்ட வியக்கவைக்கும் பரிசுகளை வெல்லலாம்.
மேலும், அதிவேக டேட்டாவுடன் சேர்த்து வரம்பற்ற காலிங் மற்றும் ரோமிங் பயன்கள் வழங்கக்கூடிய பிரத்யேக ‘காலா’ பிராண்டு கொண்ட சிம் பவுச் மற்றும் ப்ரீபெய்டு பேக்குகளையும் ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விசேஷ பேக் ஒரு ‘காலா’ காலாண்டருடன் வெளிவந்துள்ளது. இதை ரசிகர்கள் அவர்களுடைய கலெக்ஷனில் சேர்த்துக் கொள்ளலாம்.
பார்தி ஏர்டெல் கேரளா ரூ தமிழ்நாடு – ஹப் தலைமைச் செயல் அதிகாரி, மனோஜ் முரளி பேசுகையில், ‘நாங்கள் ‘காலா’வுடன் கூட்டுவகிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். எங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகத்தான வலையமைப்பு மற்றும் உட்பொருளடக்க அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற முனைப்பின் ஒரு பகுதியாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரத்யேக ‘காலா’ அனுபவத்தைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். சமீபத்தில் இந்த திட்ட அறிமுக நிகழ்ச்சியில் இயக்குநர் ரஞ்சித் கலந்து கொண்டார்