எமோஜிக்(Emoji)கள் இப்போது குரோம் ஓ.எஸ்-ல் பயன்படுத்தலாம்..!
எமோஜிக்கள், நம் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்துவதை மிகவும் எளிதாக்கியுள்ளன. டிவீட் போடும் போதோ அல்லது பேஸ்புக்கில் போஸ்ட் போடும் போதோ, எமோஜிக்களை சேர்ப்பது வேடிக்கையான ஒன்று. ஆனால் குரோம்புக்கில் எமோஜிக்களை பயன்படுத்துவது மிகவும் சிரமமான ஒன்று.
குரோம் ஓ.எஸ்-ல் எமோஜிக்களை பயன்படுத்துவது பற்றிய சில வழிகளைப் பார்ப்போம்.பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி குரோம் ஓ.எஸ்-ல் எமோஜிக்களை வெற்றிகரமாக சேர்க்கலாம்.
- உள்ளீடு செயல்பாடுகளை இயக்க உள்ளீடு செயல்பாடுகளை காண்பிக்க , கூடுதலாக எவற்றையும் இன்ஸ்டால் செய்யத்தேவையில்லை. குரோம் ஓ.எஸ்ஸின் வலது கீழ் மூலையில் உள்ள உங்கள் ப்ரொபைலை கிளிக் செய்யவும்.
- பின்னர் செட்டிங்ஸ் ஐகானை கிளிக் செய்து, அந்த பட்டியலின் கீழ் பகுதியில் உள்ள ‘Advanced ‘ஐ தேர்வு செய்யவும். பின்னர் ‘Language & Input’ ஐ தேர்வு செய்து , அதில் ‘Input Method’ க்கு சென்று ‘Show input options on the shelf’ ஐ எனேபில் செய்யவும்.
- மெய்நிகர் விசைப்பலகையை இயக்கவும் இப்போது குரோம்புக் செல்ப்பில் உள்ள இன்புட் மெத்தேட் ஐகானை கிளிக் செய்து அதை திறக்கவும். உடனே குரோம்புக்கில் உள்ளீடு செய்யும் பல்வேறு முறைகள் உள்ள பாப்அப் திரை ஒன்று தோன்றும். அந்த பல வழிமுறைகளில் எமோஜிக்களை உள்ளீடு செய்யும் முறையும் ஒன்று.
- எமோஜி கீபோர்டை திறக்க, ஸ்மைலி ஐகானை கிளிக் செய்யவும். இப்போது கீபோர்டின் அடிப்பகுதி முழுவதும் எமோஜிக்களால் நிரம்பியிருக்கும். ‘text field on-screen’ ஐ கிளிக் செய்து தேவையான எமோஜிக்களை உள்ளீடு செய்யலாம்.
- எமோஜியை தேடலாம் சிலநேரங்களில் உடனடியாக மெய்நிகர் கீபோர்டில் எமோஜியை பார்க்க முடியாது. ஆண்ராய்டு ஸ்மார்ட்போன் உபயோகிப்பவராக இருந்தால் இதை அடிக்கடி எதிர்கொள்ளலாம்.
- எமோஜி பகுதி எங்கேயாவது மறைந்திருக்கும் என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. விசைப்பலகையில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து , பின்னர் ஸ்மைலி ஐகானை கிளிக் செய்தால் எமோஜிக்கள் பட்டியல் வந்துவிடும். தற்போது உங்களுக்கு தேவையான எமோஜிக்களை பதிவிடலாம்.
பின்னர் விசைப்பலகையை மறைக்க, கீழ்பகுதியில் உள்ள கீபோர்டு ஐகானை கிளிக் செய்யவும். இந்த மூன்று எளிதான வழிமுறைகளை பயன்படுத்தி குரோம் ஓ.எஸ்-ல் எந்தவித சிரமமும் இன்றி எளிதாக எமோஜிக்களை பயன்படுத்தலாம்.