பானாசோனிக் இந்தியா ,ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் எனப்படும் இயந்திர கற்றல் (ML) திறன்களை விரிவுபடுத்தும் முனைப்பின் கீழ், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஏஐ திறன்கள் கொண்டு இயங்குஜ்ம் அதன் – அர்போ ஹப் (Arbo Hub) தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த அர்போ ஹப் வழியாக பயனர்கள் பல வகையான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை ஒரே இடத்தில் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அர்பா ஹாப் ஆனது பானாசோனிக் நிறுவனத்தின் வரவிருக்கும் பானாசோனிக் P85 NXT மற்றும் Eluga Ray 710 ஸ்மார்ட்போன்களில் இன்-பில்ட் ஆக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியாகியுள்ள நிறுவனத்தின் அறிக்கையின் படி, அர்போ ஹப் ஆனது பயனர்களின் குறிப்பிட்ட தேவைகளை கற்று அறிந்து மற்றும் சிங்கிள் பிளாட்பார்மில் அனைத்து ஆப்ஸ்களின் பயன்பாட்டையும் வழங்கும்.
அதாவது மிக ஒழுங்கான முறையில் அனைத்து ஆப்ஸ்களின் சேவைகளையும் வழங்கும். தனது ஸ்மார்ட்போனின் பயனர்களுக்கு பல்வேறு தளங்களை வழங்குவதற்காக ஓலா,AccuWeather, MobiKwik மற்றும் Gamezop போன்ற ஆன்லைன் சேவை வழங்குநர்களிடம் பானாசோனிக் நிறுவனம் இணைந்துள்ளது.
“ஒரு ஆண்டுக்கு முன்னர் எங்கள் நிறுவனத்தின் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் ஆன ஆர்போ தொடங்கப்பட்டது. இனி பயனர்கள் பல பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து, தங்களின் ஸ்மார்ட்போனுக்கு ஒரு ஒழுங்கற்ற நிலையில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.பானசோனிக் இந்தியாவின் பிசினஸ் ஹெட் ஆன (மொபிலிட்டி டிவிஷன்) பங்கஜ் ராணா, ‘அர்போ ஹப்’ வழியாக ஒரு ஒற்றை தளத்தில் அனைத்து சேவைகளையும் வழங்குவதை உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார். How To Increase the Speed of your Laptop (TAMIL) அர்போ ஹப் ஆனது எலுகா ரே 700 ஸ்மார்ட்போனிற்கு, ஓ.டி.ஏ எனப்படும் ஓவர் தி ஏர் வழியிலான அப்டேட் ஆக வந்து சேரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…