இந்த வருடத்திற்குள் செயற்கைகோளுடன் ரயில்கள் இணைப்பு!
இந்தியாவில் ரயில் விபத்துக்கள் வருடாவருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது .இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் அது தோல்வியிலே முடிகிறது .எனவே இந்த விபத்துக்கு தீர்வு காண விபத்துகளை தடுப்பதற்காக, வரும் டிசம்பருக்குள் இஸ்ரோ செயற்கைக்கோள் மூலமாக அனைத்து ரயில் இன்ஜின்களையும் இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே மூத்த அதிகாரி கூறுகையில், “ இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமுள்ள 10,800 இன்ஜின்களிலும் ஆன்டனா பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும்.. இதன் மூலம் ரயில் செல்லும் வழிதடம் கண்காணிக்கப்படுவதோடு ரயில் இன்ஜின் ஊழியர்களிடம் உடனடியாக தொடர்பு கொள்ளவும் முடியும்” என்றார்…
source: dinasuvadu.com