இந்திய பயனர்கள் 5.6 லட்சம் பேரின் தகவல்கள் ஃபேஸ்புக் மூலம் பகிர்வு ?
ஃபேஸ்புக் ஐந்தரை லட்சம் இந்தியர்களின் தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திடம் பகிரப்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளது.
பிரிட்டனில் இயங்கும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம், ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை முறைகேடாகப் பெற்று தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஃபேஸ்புக்கிடம் மத்திய அரசு சில கேள்விகளை கேட்டிருந்தது. இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்கள் பகிரப்பட்டதா? தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்டதா? என்று கேட்டிருந்தது. இதற்கு விளக்கம் அளித்த ஃபேஸ்புக், 5 லட்சத்து 62 ஆயிரம் பயனர்களின் தகவல்கள் பகிரப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.