இணையத்தில் லீக்கானது சாம்சங் கேலக்ஸி எம் 20…!!!! எந்த ராக்கர்ஸின் வேலையோ…!!! வெளியானது அதன் சிறப்பம்சங்கள் …!!!
கொரியாவை தலைமை இடமாக செயல்படும் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் சாம்சங் கேலக்ஸி எம்10, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி எம்30 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.இந்நிலையில், கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
இதன் படி கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி., பிளஸ் 720×1520 பிக்சல் டிஸ்ப்ளே, 14 என்.எம். ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7870 சிப்செட், 2 ஜி.பி. அல்லது 3 ஜி.பி. ரேம் ஆகியன இந்த மாடலில் வழங்கப்படுகிறது.புகைப்படங்களை எடுக்க பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, 13 எம்.பி. + 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா யூனிடும் வழங்கப்படுகிறது.
புதிய கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி இதில் வழங்கப்பட்டிருக்கிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. இத்துடன் இன்ஃபினிட்டி வி ரக ஸ்கிரீன், வால்யூம் லாக்கர், பவர் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.இத்துடன் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் இடதுபுறம் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் உள்ளிட்டவை காணப்படுகிறது.இதனால் ஸ்மார்ட் போன் ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த வகை போனுக்காக காத்திருக்கின்றனர்.இந்த தகவல் இணையத்தில் லிக்காகி உள்ளது அந்த நிறுவனத்தினரிடையே கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU.