அதளபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஜியோனி நிறுவனம்!!!

Default Image

சீனாவை சேர்ந்த முன்னனி போன் நிறுவனமான ஜியோனி நிறுவனமானது, 2013ஆம் ஆண்டு முதல் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த டிசம்பர் முதல் முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை அதன் கடன் நிலுவை தொகை மட்டுமே, 20,300 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் சூதாட்டத்தில் பெரும் பணத்தை இழந்தது என கூறப்பட்டு வருகிறது.
இந்த கடன் தொகை மற்றும் சூதாட்ட புகார் பற்றி, அதன் தலைவர் கூறுகையில் , ஜியோனி நிறுவனம் அதிகமான கடன் பெற்றிருப்பது உண்மைதான். சூதாட்டத்திலும் ஈடுபட்டது உண்மைதான். ஆனால், கம்பெனி பணம் சூதாட்டத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. என கூறினார்.
மேலும் சூதாட்டத்தில் 144 மில்லியன் டாலர்களை மட்டுமே இழந்ததாகவும், ஜியோனி 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 290 கோடி டாலர்களை 648 சிறு நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையாக வழங்க வேண்டி இருந்தது. இந்நிறுவனத்திற்கு கடந்த 2013 முதல் 2015க்குள் மட்டும் சுமார் 1.44 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. கடந்த இரு ஆண்டுகளில் இந்த இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. எனவும் தெரிவித்தார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்