ஃபேஸ்புக்கில் வந்தது புதிய அப்டேட்..!
ஃபேஸ்புக் தளத்தில் மெமரீஸ் (Memories) என்ற பெயரில் புதிய பக்கம் திறக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய மெமரீஸ் பக்கத்தில் பயனர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்ட போஸ்ட், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நினைவு கூற முடியும்.
ஃபேஸ்புக்கில் முன்னதாக வழங்கப்பட்டிருந்த ஆன் திஸ் டே (On This Day) அம்சத்தை தினமும் 9 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மெமரீஸ் பக்கம் இதே அம்சத்திற்கான புதிய நீட்சியாக பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்த அம்சம் பயனர்களை மனதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது தெரியவந்தது.
அந்த வகையில் ஆன் திஸ் டே அம்சம் மேம்படுத்தப்பட்டு, பயனர்கள் தங்களின் கடந்த கால நினைவுகளை மீண்டும் திரும்ப பார்ப்பதை மிக எளிமையாக்குகிறது. புதிய மெமரீஸ் பக்கத்தில் ஆன் திஸ் டே (On This Day), ஃப்ரென்ட்ஸ் மேட் ஆன் திஸ் டே (Friends Made On This Day), ரீகேப்ஸ் ஆஃப் மெமரீஸ் (Recaps of Memories), மெமரீஸ் யூ மே ஹேவ் மிஸ்டு (Memories You May Have Missed) போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.
புதிய மெமரீஸ் ஆப்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் ஒவ்வொரு ஆப்ஷனிலும் குறிப்பிட்ட தேதியில் கடந்த ஆண்டுகளில் நீங்கள் பதிவிட்ட போஸ்ட்கள், புகைப்படங்களை பார்க்க முடியும். இத்துடன் மெமரீஸ் பகுதியில் கடந்த வாரம் நீங்கள் தவற விட்ட போஸ்ட்களை உங்களுக்கு பட்டியலிடும்.