சென்னை : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. அந்த நிகழ்வில், 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அதற்கு அருகே உள்ள தனியார் பள்ளிகள் மூலம் தேவையான உதவி செய்யப்போவதாக தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில், நன்றி தெரிவித்தார். இதனை அடுத்து, தமிழகத்தில் 500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் அமைப்பு தத்தெடுக்க போவதாக சில தகவல்கள் நேற்று வெளியாகின. […]
சென்னை : 2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ இரயிலில் கடந்த ஆண்டு எவ்வளவு பேர் பயணம் செய்துள்ளார்கள் என்பதற்கான விவரத்தை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ இரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து நிர்வாகம் தனது எஸ்கே வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது ” சென்னை மெட்ரோ இரயிலில் நாள் ஒன்றுக்கு […]
மதுரை : அமைச்சர் மூர்த்தி அண்மையில் மதுரையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில், ” இது ஆண்ட பரம்பரை என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்காக 5 ஆயிரம் 10ஆயிரம் பேர் இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் எனற வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும்.” என்றும், ” ஆங்கிலேயர்கள் கோயில் சொத்துக்களை கொள்ளையடித்து செல்வதை தடுக்க இந்த […]
விழுப்புரம் : கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் , கட்சியின் இளைஞரணி தலைவர் பொறுப்பிற்கு தனது மகள் ஸ்ரீகாந்தியின் மகன் முகுந்தன் பரசுராமனை நியமித்து அறிவித்தார். பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுத்ததை மேடையிலேயே கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். முகுந்தன் கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இளைஞரணி தலைவர் பொறுப்பா? கட்சியில் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள் என […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி தற்போது அதிக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் பெயர் கொண்ட எப்ஐஆர் இணையத்தில் லீக் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், அந்த எப்ஐஆரில் தான் ‘சார்’ பற்றி குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாலியல் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]
சென்னை: தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று 4-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று மலர்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, இதில் அரிய வகை மரங்களும் உள்ளன. செம்மொழி பூங்காவில் 30 லட்சம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த […]
சென்னை : சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் 30 லட்சம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரையில் இந்த மலர் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் நெவாடாவில் உள்ள லாஸ் வேகாஸில் டொனால்ட் டிரம்ப் ஹோட்டல் முன்பு டெஸ்லாவின் சைபர் டிரக் வெடித்து சிதறியது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என எலான் மஸ்க் […]
மதுரை : அமைச்சர் மூர்த்தி அண்மையில் மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பிட்ட சமுதாய மக்களை உயர்த்தி கூறும் வகையில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அவர் பேசுகையில், இது ஆண்ட பரம்பரை என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இப்போது படித்திருக்கிறீர்க்ள். மற்ற சமூகத்தில், 4 பேர் உயிரிழந்தனர், 2 பேர் உயிரிழந்தனர் என்பதை பெரிதாக பேசுகிறார்கள். ஆனால், சுதந்திரத்திற்காக 5 […]
சென்னை : தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரையாண்டு தேர்வானது கடந்த டிசம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வானது நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜனவரி 2ஆம் தேதியான இன்று பள்ளிகள் திறக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சமூக வலைதளங்களில், சில […]
தூத்துக்குடி : மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் எழுகின்றது எனக் கூறி தமிழக அரசு தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து புதிய நகராட்சிகள் பேரூராட்சிகள் அமைக்க 5 அரசாணைகளை பிறப்பித்துள்ளது. இவ்வாறு இணைக்கப்படுவதன் மூலம், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதிகள் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம், மருத்துவ வசதிகளும் […]
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே. பாலகிருஷ்ணன், அமைச்சரின் அறிவிப்பு பேரதிர்ச்சி கொடுப்பதாகவும், அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார் இது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் பக்கத்தில், “500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் […]
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், இந்த வழக்கில் சார் என்ற நபரை, மாணவி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த ‘சார்’ யார் என்பது இன்று வரை தெரியா புதிரா இருந்து வருகிறது. இதனால், அவர் யார் என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் கடும் […]
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (01-01-2025) சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி […]
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, திருப்பூர் : வடுகபாளையம், சென்னியாண்டவர்கோவில், வினோபாநகர், விராலிகாடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளிபாளையம், திம்மினியம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, சவுகாட்டுப்பாளையம், தண்டுகாரன்பாளையம், செய்யூர், குளத்துப்பாளையம், செய்யூர், ஆசனல்லிபாளையம், பந்தம்பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், பொத்தம்பாளையம், சாந்தைபுதூர், பாப்பான்குளம், வலியூர், சவுக்காட்டுபாளையம், நடுவாச்சேரி, தளிஞ்சிபாளையம், மரப்பம்பாளையம், கூட்டப்பள்ளி, தண்ணி தேனி : சங்கராபுரம், நாகலாபுரம், சிந்தலச்சேரி, […]
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவை அடங்கிய தொகுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த முறை பொங்கல் பரிசு தொகையாக எதுவும் வழங்கப்படவில்லை. இதனை குறிப்பிட்டு பல்வேறு கட்சியினரும் பொங்கல் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக கூட்டணி கட்சிகளே இந்த கோரிக்கையை ஆளும் திமுக அரசுக்கு முன்வைத்து வருகின்றன. இப்படியான சூழலில் இன்று […]
சென்னை : இன்று 2025ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை உலக மக்கள் வான வேடிக்கை, ஆடல் பாடல் என உற்சாகத்துடன் வரவேற்று வருகின்றனர். தமிழகத்தில் சென்னை மெரினா, பெசன்ட் நகர் பகுதிகள், கோவை என பல்வேறு பகுதிகளிலும் புத்தான்டு கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டு தினத்தை தெய்வீக வழிபாட்டுடன் பிரசித்திபெற்ற கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவு முதலே சிறப்பு பூஜைகள், சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை : நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என பல்வேறு விதமாக 2025இன் முதல் நாளை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக சென்னை , கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிரதான நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. வழக்கம் போல, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நள்ளிரவு 12மணி வரை துள்ளலான இசை , நடனம், பாட்டு என புத்தாண்டை அங்குள்ள பொதுமக்கள் […]
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி என்பவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நேரு தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் காமெடி செய்த பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து […]
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மெரினா கடற்கரைக்கு செல்லும் பாதைகள் முழுமையாக மூடப்பட்டது. மெரினா கடற்கரை முழுவதுமாக காவல்துறை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, மெரினா கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக டி.ஜி.பி. அலுவலகம் அருகே, தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் […]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சீமானும், நாம் தமிழர் கட்சியினரும் இன்று காலை கைது செய்யப்பட்டு சென்னை பெரியமேட்டில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டார். விடுதலைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தேவையற்ற ஒடுக்கு முறையாக எனது […]