தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார்.அப்பொழுது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் (ரேவதி) உயிரிழந்த சம்பவம் தெலுங்கு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது மகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சத்யா திரையரங்க மேலாளர்கள், புஷ்பா-2 பட தயாரிப்பாளர்கள், ஹீரோ அல்லு அர்ஜுன் மற்றும் […]
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக தலைவர் விஜய் கொண்டாட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி கட்சியை அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில், விஜய் தனது கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாதத்திற்குள் பொறுப்பாளர்களை நியமிக்கும்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் […]
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம் அப்புகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியின் உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த குழந்தை லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைய, சிறுமி தொட்டிக்குள்ளே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தகவலின்பேரில் சிறுமி உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பள்ளி நிர்வாகத்தைக் […]
மதுரை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில், மதுரையில் பேரணி நடத்தப்பட்டது. இதில் குஷ்புவும் கலந்து கொண்டார். தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவினர் அறிவித்ததால் முன்னதாகவே மதுரையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருந்தாலும், தடையை மீறி பேரணி செல்லப்பட்டது. அப்பொழுது தீச்சட்டி ஏந்தியும், கண்ணகி வேடமிட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மிளகாய் இடித்து கண்ணகி சிலைக்கு பூசினர். பின்னர், இதற்கு அனுமதி இல்லை என்று கூறி பேரணி நடத்திய […]
சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய விலைக்கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக […]
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி இன்று (03-01-2025) அதிகாலை 2:30 மணிக்கு உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்து சமையல் எரிவாயு கசிய தொடங்கியதால், அங்கு பதற்றமான சூழல் உருவாகியது. விபத்தின்போது, டேங்கர் லாரியில் இருந்து எல்பிஜி வெளியேறிய நிலையில், ஆபத்துகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக தீயணைப்புத்துறையினர் தண்ணீரை லாரியின் மீது பாய்ச்சினர். மேலும் லாரியை மீட்கும் […]
செங்கல்பட்டு : பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என்றும் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு நபர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து செங்கல்ப்ட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆட்சியர் அலுவலகம் முன்பு, அதாவது வெளியே பாபு என்ற நபர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது அவர் மேல் […]
தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள், விவசாயிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச முன்வந்தார். அவர், மைக் முன்னாடி நின்று கொண்டு பேச முற்படும்போது […]
சென்னை : வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர் பகுதியில் உள்ள திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டிலும், திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும், கிங்ஸ்டன் கல்லூரி மற்றும் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் தொடர்புடையோர் வீடுகளிலும் அமலாக்கத்துறைனர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க இருந்ததாக கூறி ஒரு சில இடங்களில் […]
சென்னை : கேரளாவில் இருந்து கோவைக்கு 18 டன் சமையல் எரிவாயுவை ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று கோவை அவினாசி பாலத்தில் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டேங்கரில் இருந்து சமையல் எரிவாயு கசிந்துள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் மகன் திமுக எம்பி கதிர் ஆனந்த் மற்றும் திமுக நிர்வாகி ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் இன்று […]
கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்து சமையல் எரிவாயு கசிந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் உருவாக்கியுள்ளது. அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் பொறியாளர்கள் மீட்புப்பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். அபாயமிக்க சமையல் எரிவாயு லாரியில் […]
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும். அதே போல இந்தாண்டும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம் பெற்ற பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு. இந்த பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று (ஜனவரி 3) முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று ரேஷன் […]
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள் குரல் கொடுத்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைதும் செய்து வருகிறது. அந்த வகையில், இன்று பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். இதனையடுத்து, சௌமியா […]
சென்னை: சென்னையில் நான்காவது முறையாக வேளாண் உழவர் நலத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள, செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை இன்று தமிழக முதல்வர் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார். இந்தக் மலர் கண்காட்சி இன்று முதல் தொடங்கி ஜனவரி 11 வரை, 10 நாட்கள் நடைபெறுகிறது, காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். இந்தக் கண்காட்சிக்காகவே ஊட்டி, கோவை, கிருஷ்ணகிரி, ஓசூர், கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய […]
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசுத் துறையில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2023-2024-ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். […]
சென்னை : அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவதாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைதும் செய்து வருகிறது. குறிப்பாக, இன்று பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிறகு “இன்னும் […]
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,இன்று 02-ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. அதைப்போல, நாளை 03-01-2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். […]
கோவை : காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பாம்பே நகர், டீச்சர்ஸ்கோ, கணேசநகர், ஸ்ரீராம் நகர், தப்பம்பட்டி சென்னை : ஏழுமலை சாலை மெயின் ரோடு, ஏழுமலை சாலை 1 முதல் 7வது தெரு, வடிவால் நகர் 1 முதல் 3வது தெரு, கோபால் நகர் […]
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என்ற கேள்வி தற்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாலியல் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக மகளிர் அணி மவுனம் காப்பது ஏன்? என பாஜக நிர்வாகி குஷ்பூ கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பூ,”ஒரு […]
சென்னை : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன. அந்த நிகழ்வில், 500 அரசு பள்ளிகளை தேர்வு செய்து அதற்கு அருகே உள்ள தனியார் பள்ளிகள் மூலம் தேவையான உதவி செய்யப்போவதாக தெரிவித்தனர். இந்த முயற்சிக்கு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில், நன்றி தெரிவித்தார். இதனை அடுத்து, தமிழகத்தில் 500 அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் அமைப்பு தத்தெடுக்க போவதாக சில தகவல்கள் நேற்று வெளியாகின. […]